24 special

பரோட்டா சாப்பிட்டு மாணவனுக்கு ஏற்பட்ட கதி... அதிர்ச்சியில் உறைந்த பரோட்டா ஆர்வலர்கள்.....

parotta issue
parotta issue

ஒவ்வொரு மாவட்டத்தின் தெருக்கள் தோறும் இரவு நேரங்களில் தள்ளுவண்டி கடைகளில் ஆவி பறக்க இட்லியும் சூடான மீன் குழம்பு, சாம்பார், சட்னி மற்றும் மட்டன் குழம்பு வைத்து பரிமாறும் தள்ளு வண்டி கடைகள் அனைத்தும் 2000 க்கு முன்பு இருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு தெருக்களின் முனைகளிலும் வரிசையாக தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு வெஜ் ப்ரைடு ரைஸ், எக் ஃபிரைடு ரைஸ், சிக்கன் ப்ரைட் ரைஸ், பரோட்டா கொத்து பரோட்டா, குத்துக்கறி சிக்கன் நூடுல்ஸ் சிக்கன் கிரேவி காளான் நூடுல்ஸ் என்ற பல பாஸ்ட் புட்டுகள் விற்கப்படுகிறது. அந்த கடைகள் முழுவதையும் ஈ மொய்க்கும் அளவிற்கு இளைஞர்கள் குவிந்திருக்கின்றன. பெரிய பெரிய ஹோட்டலில் மட்டுமே ஆர்டர் செய்தவுடன் சூடான உணவு கிடைக்கப்படும் என்று நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு எளிமையான முறையில் கைல காசு வாயில தோசை என்பது போன்று சூடான ஆர்டர்கள் சுட சுட எடுக்கப்பட்டு உணவுகளும் சூடாகவே பரிமாறப்படுகிறது. 


அந்த அளவிற்கு இந்த உணவின் மீது உள்ள சுவைக்கு இக்கால இளைஞர்கள் நாவடிமையாக உள்ளனர். ஆனால் இவற்றில் சுகாதாரம் ஆரோக்கியம் மற்றும் ஏதேனும் நலன் இருக்குமா என்று கேட்டால் பெரும் கேள்விக்குறியாக தான் உள்ளது. ஏன் இதை சாப்பிடுவீர்கள் என்று கேட்டால் சிலர் சுவையாக இருக்கிறது என்கிறார்கள் சிலர் வேறு எந்த உணவும் கிடைக்கவில்லையே என்கிறார்கள். ஆனால் இதே கருத்தை மருத்துவர்களிடம் கேட்கும் பொழுது நவநாகரிகமான உணவாக பாஸ்புட் தற்போது உள்ளது அத்தகைய உணவுகளை என்றாவது ஒருநாள் சாப்பிடலாம் ஆனால் தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். நாக்கின் ருசிக்காக இப்பொழுது சாப்பிடுபவர்களுக்கு இளமை வயதில் ஒன்றும் தெரியாது ஆனால் வயதான பிறகு தான் இவற்றின் தாக்கம் பெரிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வேக உணவு கலாச்சாரம் நகர் பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலும் ஆக்கிரமித்துள்ளனர். 

ஆனால் இதே உணவால் ஒருவர் தனது 50 வயதை எட்டும் பொழுதே உடல் நலக்குறைவால் பாதிப்பு அடைவார். இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் தற்போது இந்த உணவு பழக்கத்தில் அதிக மோகம் கொண்டுள்ளனர் இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு இருதய நோய் மற்றும் கேன்சர் போன்றவை தாக்குவதாக உளவியல் மற்றும் உணவு அறிவியல் கழகம் அறிவித்துள்ளது. இப்படி அவசர வேக உணவின் கலாச்சாரம் மேலோங்கி உள்ள நிலையில் சில கடைகள் பாரம்பரியமாக உணவை தயாரித்து இயற்கையாக விளையும் பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக சமைத்தும் வருகின்றனர். இருப்பினும் அதற்கு பின்னால் செல்லும் இளைஞர்களின் கூட்டத்தை விட இந்த பாஸ்புட் கலாச்சாரத்திற்கு பின்னால் செல்லும் இளைஞர்கள் கூட்டமே அதிகமாக உள்ளது. 

இந்த நிலையில் பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் கோவை பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் இரவு வேளையில் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா சாப்பிட்டுள்ளார் காலையில் அசைவில்லாமல் கிடந்துள்ளார். அசைவில்லாமல் கிடந்த தனது நண்பரை பார்த்த மற்ற நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது நண்பர்கள் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜங்க் ஃபுட் எனப்படும் பரோட்டாவை சாப்பிட்டு காலையில் எழுந்த போது மரணத்தை தழுவிய இவரின் செய்தி கோவை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.