தற்போதுள்ள திராவிட கழகம் சார்பில் பெரும்பாலும் இந்து சமயத்தை முற்றிலும் வெறுப்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து இதை பெரியார் வலியுறுத்தினார்! பெரியார் வழியை பின்பற்றினால் குற்றம் என்று கூறுவீர்களா என்ற வாக்குவாதங்களை பெருமளவில் முன்வைத்து வருகின்றனர். முன்னதாக பெரியாரின் கருத்துக்களை பின்பற்றுபவர்களாக கருதப்படுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் நிகழ்த்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். சனாதனத்தால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றும் மூடநம்பிக்கைகள் தீண்டாமைகள் அதிகம் நிறைந்தது சனாதனம் என்றும் அவற்றை ஒழிப்பதற்காகவே திராவிட முன் வந்தது திராவிடத்திற்கு பிறகு சனாதனம் குறைய தொடங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார்.
இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது சனாதனம் என்பது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சனாதனத்தை அவமதிப்பது மக்களின் நம்பிக்கை அவமதிப்பது போன்று என்ற கருத்துக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரும் விமர்சனங்களாக எழுந்தது. சமீபத்தில் கூட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்த குடியரசு தலைவரின் நடவடிக்கை செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து மாநிலங்களவையில் மத்திய வல்துறை அமைச்சர் 2019 திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்பொழுது ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களில் அதிகரிப்பது எஸ் சி மற்றும் எஸ்டி பிரதிநிதித்துவம் உள்ளிட்டவைகள் மசோதாவில் இடம் பெற்றிருந்தது. அந்நிலையில் இந்த மசோதா மீது திமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது அப்துல்லா பெரியார் கூறிய கருத்துக்களை அடிகோடிட்டு பேசினார்.
இதனால் மக்களவையில் பெரும் அமளி நிலவியது. அவை முழுவதும் சிறிது நேரத்திற்கு கூச்சலும் குழப்பமும் தொடர்ந்தது. சிறப்பு அந்தஸ்தால் காஷ்மீர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை பெரிதும் மறந்திருந்தனர் தற்போது இது ரத்து செய்யப்பட்டிருப்பதால் காஷ்மீர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்விற்கு திரும்பி சுதந்திரமாக உள்ளனர் இது தவறு என்று பெரியாரின் ஒரு கருத்தை கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எம்பி தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து முரண்பாடான கருத்துக்களையும், இந்து சமயம் கூடாது, இந்து கலாச்சாரம் மூடநம்பிக்கையானது என இந்து சமயத்தையும் பெரியார் கூறிய கருத்துக்களையே முரண்பாடாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெரியார் பேரன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா ராமதாஸ் செம்ம பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு வீடியோவில் சௌமியா அன்புமணி பேசும்போது ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகியம்மன் கோவிலுக்கு திருமணம் ஆகாதவர்களை அழைத்துச் சென்றாலும் திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை அழைத்துச் சென்றாலும் ஒரு வருடத்தில் அவர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நம்புநாயகி அம்மன் கோவிலுக்கு இவர்களை அழைத்துச் சென்று அங்கு அம்மியில் நம் கொண்டு செல்லும் மஞ்சளை வைத்து அரைத்து அம்மனுக்கு சாத்தி அவர்கள் தரும் மஞ்சளை நாம் எடுத்துக் கொண்டு வர வேண்டும் இதன் மூலம் எங்கள் வீட்டில் கல்யாணம் ஆனவர்கள் அனைவருக்கும் ஒரு வருடத்திலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது.
அந்த அம்மனின் கருணையாலே அடுத்தடுத்த பிறந்த நாட்களை எங்கள் வீட்டில் நாங்கள் கொண்டாடினோம் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படி தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அரசியல் தலைவியின் மனைவியே இந்து சமயம் வழிபாட்டின் பெருமை பேசியது ஈவேராவை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இவர் கொடுத்துள்ள பேட்டி செருப்படியாக அமைந்துள்ளது என இணையத்தில் கமெண்டுகள் பறக்கின்றன.