ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவானே 2021 ஜூலை 15 அன்று ஜெய்சால்மர் ராணுவ மையத்தை வந்தடைந்தார். தென் மண்டல ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜே எஸ் நய்னுடன் பொக்ரான் துப்பாக்கி சுடும் தளத்துக்கு சென்ற அவர், பல்வேறு துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாரித்த உபகரணங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் ஜெய்சால்மர் ராணுவ மையத்திற்கு சென்ற ராணுவ தளபதியிடம், தற்போதைய நிலைமை மற்றும் தயார்நிலை குறித்து மூத்த அதிகாரிகள் விளக்கினர்.
கொனார்க் படை பிரிவினரிடம் உரையாடிய ராணுவ தளபதி, மிகச்சிறந்த பயிற்சி மற்றும் பணித்திறனை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உதவி ஆகியவற்றுக்காக ராணுவத்தினரை ராணுவ தளபதி பாராட்டினார்