ஒன்றிய அரசு என மத்திய அரசை விமர்சித்து பேசி தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது திமுக அரசு , கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய 90 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருவதாகவும் அது குறித்து கொங்கு மண்டல பகுதிகளில் உள்ள மக்களின் கருத்துக்களை அறிய முக்கிய நாளிதழ் ஒன்றின் மூலம் செய்திகளை கசியவிட்டுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவசரமாக டெல்லி சென்றுள்ளார், இன்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்களை சந்திக்கும் அவர் தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கிறார், அத்துடன் மத்திய அரசின் கீழ் உள்ள IAS, IPS அதிகாரிகள் குறித்தும் அவர்களின் தமிழக நடவடிக்கை குறித்தும் உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கிறார், மேலும் அதிமுகவில் EPS மற்றும் OPS செயல்பாடுகள் குறித்தும் அரசியல் கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
விரைவில் தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் பன்வாரிலால் ப்ரோகித் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்க படலாம் அல்லது அவருக்கு முழு ஓய்வு கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது, இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்து சென்றது போல் கொங்கு நாட்டை தமிழகத்தில் இருந்து பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, முதல் இரண்டு வருடம் யூனியன் பிரதேச அந்தஸ்தும் அதன் பிறகு மாநில அந்தஸ்தும் கொடுக்க இருக்கிறார்களாம்.
ஒன்றிய அரசு என மத்திய அரசை புது அடைமொழியில் அழைத்து வந்த திமுக அரசிற்கு புது கொங்குநாடு திட்டம் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனை முதலிலேயே தடுக்க கொங்கு மண்டலத்தை உள்ளடக்கி தனி அந்தஸ்து கொடுக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதனை வருகின்ற சட்டமன்ற கூட்ட தொடரிலேயே நிறைவேற்ற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே குறிப்பாக அசாம் போன்ற பழன்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தன்னாட்சி சபை உள்ளது, இவர்கள் தங்களுக்கு என்று திருமணம் உள்ளிட்ட சில பழக்க வழங்கங்களில் மாற்றம் கொண்டுவரமுடியும், ஆனால் பிறர் வாழும் பகுதிகளில் தன்னாட்சி சபை பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
இருப்பினும் எப்படியாவது தனி கொங்குநாடு எனும் கோரிக்கை வலுபெறாமல் இருக்க திமுக இந்த முயற்சியை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது, ஒன்றிய அரசு என ஒரு கோசத்தை எழுப்பி இப்போது கொங்கு நாடு என்ற ஒரு தனி ஒன்றிய பிரதேசத்தை உருவாக்க திமுக பிள்ளையார் சுழி போட்டுள்ளது என்பது மட்டும் தற்போது தெளிவாகியுள்ளது.