24 special

பீகாரில் இனி என்ன நடக்கும்...ஆழமாக கருத்து பதிவிட்ட சுந்தர் ராஜ சோழன் !

Nitish kumar,  modi
Nitish kumar, modi

பீகார் மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் பரபரப்பை எட்டியுள்ள நிலையில் வரும் காலத்தில் அங்கு என்ன மாற்றங்கள் அரங்கேறும் என பிரபல அரசியல் பார்வையாளர் சுந்தர் ராஜசோழன் குறிப்பிட்டுள்ளார் அது பின்வருமாறு :-


நிதிஷ் தன் கொடூரமான அந்திமத்தில் உள்ளார்..முலாயம் - லல்லு - நிதிஷ் இந்த வகை தலைவர்களில் இன்னும் வீழ்ச்சியை சந்திக்காதவர் நிதிஷ் மட்டுமே.பாஜகவின் நிழலில் நின்றுகொண்டே அவரால் அதனோடு யுத்தம் புரிய முடியும்.இது அவருடைய விசேஷ சக்தி..

காரணம் யாதவ் ஆட்சி அல்லது பழையபடி BHURABAL ஆட்சி என்ற இரண்டிற்கும் இடையேயான மாநில  மாற்றாக நிதிஷின் அதிகாரத்துவம் மையம் கொண்டுவிட்டது.இது பாஜகவின் தயவால் நிலைத்தது என்றால் கூட,தான்தான் முகம் என்பதை நிதிஷ் தெளிவாக பயன்படுத்திக் கொள்கிறார்.

இப்போது பிரச்சனை JDU வின் தலைவராக இருந்த RCP சிங்கினை,பாஜக தன் பீஹார் ஷிண்டேவை போல பயன்படுத்துகிறதோ? என்ற சந்தேகம் நிதிஷுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்..ஆனால் என்னைப் பொறுத்தவரை பிரச்சனை தொலைநோக்கு பார்வை கொண்ட தற்காப்பு விளையாட்டு.

இப்போது இல்லை என்றாலும் 2025 ல் இது நிச்சயம் நடக்கலாம்.2024 க்கு பிறகு பாஜகவிற்கு கிடைக்கும் பலம் அவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்குமோ? என்ற அச்சம் மாநிலத்தின் பல ஜாதிக்கட்சிளுக்கு வந்துவிட்டது..எனவே,நாம் அச்சப்படுத்த வேண்டியது அல்லது நமக்கிருக்கும் கடைசி வாய்ப்பு 2024 தேர்தலை குறி வைப்பது..

பாஜகவோடு கரைந்துவிடாமல் தன்னை தற்காத்துக்கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு,மோடிக்கான தேர்தலில் நடத்தும் இடையூறு யுத்தம் மட்டுமே என நிதிஷ் நினைக்கிறார்.இதில் கணிசமான எம்பியை பெறுவது மட்டுமே தன் கட்சியை காப்பாற்றும் என நிதிஷ் நினைக்கிறார்.ஆனால் இவர்கள் கவனிக்கத் தவறுகிற,அல்லது நிர்கதியாகும் இடங்கள் இந்த அரசியலில் உள்ளன.

பாஜக 15% கட்சி என்ற நிலையில் இருந்து 30% கட்சியாக 2014 லேயே பீஹாரில் உருவாகிவிட்டது.நிதிஷின் தயவில்லாமலேயே,நரேந்திர மோடியின் தலைமைக்கு 30% வாக்குகளும்,22 எம்பி சீட்டுகளும் பீஹாரில் வந்துவிட்டன..

இதற்கு அஞ்சிதான் நிதிஷ் தனது பழைய நண்பரான லல்லுவிடம் சரணடைந்தார் 2015 சட்டமன்ற தேர்தலில்.பாஜக தன்னை அதீதமாக கற்பனை செய்து சறுக்கிய ஒரே இடம் இதுதான் என நினைக்கிறேன்..

2015 ன் நிலை 2022 ல் இல்லை.அன்று யாதவல்லாத சமூகங்களுக்கும்,பட்டியல் சமூகங்களுக்கும் பெரிய வாய்ப்பாக,பாதுகாப்பாக நிதிஷின் முகம் இருந்தது..ஆனால் இன்று பாஜக யாதவல்லாத - குர்மியல்லாத சமூகங்களிடம் ஆழமாக ஊடுருவியுள்ளது..

2020 சட்டமன்ற தேர்தலில் பாஜகவே பெரிய அண்ணன் என்று நிரூபனம் ஆகிவிட்டது.பாஜக 74 இடங்களையும்,நிதிஷ் 48 இடங்களையும் பெற்றார்.ஆனாலும் நிதிஷிற்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதில் பாஜக தயங்கவில்லை..

பாஜகவின் துணைமுதல்வர்கள் இருவர்.ஒன்று நோனி சமூகத்தை சேர்ந்த ரேணுதேவி,இன்னொன்று கல்வார் சமூகத்தை சேர்ந்த தர்கிஷோர் பிரசாத்.இது முறையே யாதவல்லாத,குர்மியல்லாத, மாநிலத்தில் 52% தொகுப்பாக உள்ள EBC மற்றும் BC சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது.அதே போல 15% உள்ள முற்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய சபாநாயகர் பதவியை விஜய் குமார் சின்ஹாவுக்கு வழங்கியுள்ளது..

நாளை பாஜகவிற்கு பட்டியல் சமூக கூட்டணியை தனக்கென்று உருவாக்கிகொள்ள வலுவான தரப்புகளும்,பல முகங்களும் உள்ளன.RCP சிங் போன்ற குர்மி சமூக முகத்தினை முன் வைத்து JDU வை பாஜகவில் கரைத்துவிடக் கூடிய வாய்ப்பு இல்லாமலும் இல்லை.

நிதிஷ் கூடுவிட்டு கூடுபாய்வது போல கூட்டணி மாறி இன்னொருவர் தயவின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆட்டம் இனி நீடிப்பது சிரமம்.அவருடைய நம்பகத்தன்மை மிக மோசமாக இம்முறை விழும்..

நாம் முன்பு சொன்னது போல,யாதவ் ஆட்சிக்கும் BHUBARAL ஆட்சிக்கும் இடையே இருக்கும் 'யுத்தத்தை - அச்சத்தை - அரசியலை' நிரப்பும் முகமாக நிதிஷ் தன்னை நிறுவி,எதிரிக்கு எதிரி நண்பன் என ஆடும் ஆட்டம் முடிவுக்கு வரும் என்றே தோன்றுகிறது.பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.