Cinema

ஹலோ என்னங்க போட்டு தாக்கிய நடிகை கஸ்தூரி... நன்றி கூறி முடித்த நெறியாளர் தம்பி தமிழரசன்...!

Actor kasthuri and tamilarasan
Actor kasthuri and tamilarasan

அரசியல் களத்தில் அதிரடியாக கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகை கஸ்தூரி, தனக்கு சரி என்று பட்டதை நேரடியாக தெரிவித்து விடுவார், அந்த வகையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே இருக்கும் பெரியார் சிலை குறித்து விவாதம் எழுந்த போது, ஏன் சர்ச், மசூதிகள் எதிரே பெரியார் சிலைகள் இருப்பதில்லை என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருந்தார்.


இந்த சூழலில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் ஆளுநர் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து விவாதம் நடைபெற்றது, அதில் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுநர் அரசியல் செய்வதாகவும், சனாதான தர்மத்தை தூக்கி பிடிப்பவராக ஆளுநர் இருக்கிறார் என ஒருவர் குறிப்பிட அதிரடியாக பதிலடி கொடுத்தார் கஸ்தூரி.

ஹலோ என்னங்க ஆளுநர் அரசியலுக்கு மதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை நான் ஏற்கிறேன், அதே போல் தமிழ்நாட்டின் சபாநாயகர் அப்பாவு என்ன பேசினார் இந்த அரசாங்கம் அமைய காரணம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என குறிப்பிட்டார் அதை ஏன் யாரும் கேட்கவில்லை, சபாநாயகர் அரசியல் மற்றும் மதங்களை கடந்தவர் தானே ஏன் அதை நீங்கள் விவாதிக்கவில்லை என நெறியாளர் தம்பி தமிழரசனை நோக்கி அதிரடியாக கேள்வி எழுப்பினார் கஸ்தூரி.

உடனடியாக பதறிய தம்பி தமிழரசன் கஸ்தூரி நீங்கள் எங்களுக்கு வழி காட்ட வேண்டாம் நாங்கள் அனைத்தையும் விவாதமாக மாற்றி இருக்கிறோம், என கூற பதிலுக்கு கஸ்தூரி அதெல்லாம் இல்லை என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார், மொத்தத்தில் கஸ்தூரியின் நேரடி கேள்விக்கு பதில் கூறாத தம்பி தமிழரசன் கஸ்தூரி உங்கள் பதிலுக்கு நன்றி என கூறி முடித்து கொண்டார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.