2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடவும் தேவை என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாகவும் அதற்கு தடையாக இரட்டை தலைமை இருப்பதனால் ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு அனைத்து விதமான பின்னணி வேலையை செய்வது கடந்த முறை அதிமுகவிற்கு தேர்தல் ஆலோசகராக இருந்தவர் என்பதும் தெரிவந்துள்ளது, தற்போது இந்த விவாகரம் கசிய தொடங்கி இருப்பதால் இனி அதிமுக பாஜக கூட்டணி என்ன ஆகும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பாஜக எவ்வாறு டீல் செய்ய போகிறது என்பதும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் குறிப்பிட்டதாவது, காங்கிரஸின் பார்கெய்னிங் பவர் முழுதாக அடிவாங்கிவிட்டது திமுகவிடம்.2024 ல் வெறும் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக நிறுத்தலாம் அல்லது காங்கிரஸ்ஸை கழட்டி கூட விடலாம்..
இந்த நிலையை தவிர்க்கவும்,திமுகவிடம் தங்களுடைய பார்கெயினிங் பவரை ஏற்றவும்,அதிமுகவை துருப்புச் சீட்டாக காங்கிரஸ் பயன்படுத்த திட்டம் தீட்டுவது போல உள்ளது.காரணம் 2021 ல் அதிமுகவிற்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய சுனில் கனுகோலு தற்போது காங்கிரஸிற்கு பணி செய்கிறார்.
2024 தேர்தலை மையப்படுத்தி,காங்கிரஸ் தங்களுக்கு சாதகமாக தமிழக களத்தை மீண்டும் திருப்ப இந்த வேலையை செய்வது தெளிவாக தெரிகிறது.சவுக்கு போன்றவர்கள் இபிஎஸ்ஸை ஏற்றிவிடுவதன் நோக்கம் அதுதான்..காங்கிரஸ்ஸை அதிமுக நம்பினால் இழப்பு யாருக்கு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.பார்ப்போம். என குறிப்பிட்டு இருக்கிறார்.
மற்றொரு புறம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் கொங்கு பகுதியை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் பாஜக பக்கம் வந்து கொண்டு இருப்பதை அறிந்த எடப்பாடி பழனிசாமி அதனை தடுக்கவும், அதிமுகவின் நிரந்தர வாக்கு வாங்கியாக இருக்கின்ற கொங்கு வாக்குகளை வைத்து காங்கிரஸ் உடன் டீல் பேசவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறதாம்.
மொத்தத்தில் கட்சியில் பெரும்பான்மை தரப்பு நம்மிடம் இருக்கிறது பாஜக நினைத்தாலும் நம்மை எதுவும் செய்யமுடியாது என எடப்பாடி பழனிசாமி 200 மடங்கு நம்பிக்கையுடன் இருக்கிறாராம், ஆனால் கடந்த முறை சசிகலா அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவை காட்டிலும் 3 மடங்கு பெரும்பான்மையுடன் இருந்தார் இறுதியில் என்ன நடந்தது என்பதை விரைவில் எடப்பாடி பழனிசாமி உணருவார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
விரைவில் ஓபிஎஸ் ஈபி எஸ் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தால் இரட்டை இலை முதக்கப்படலாம் என்பதால் பல நிர்வாகிகள் வெளியில் சொல்ல முடியாத அளவு எடப்பாடி பழனிசாமி மீது ஆத்திரத்தில் இருக்கிறார்களாம் வருகின்ற நாட்களில் காங்கிரஸ் கட்சியுடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கம் காட்டினாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.