24 special

போராட்டக்காரர்கள் வெறிச்செயல்..! சூறையாடப்பட்ட துணைமுதல்வரின் வீடு..!

Renu devi and kishore
Renu devi and kishore

பிஹார் : பிஹார் துணை முதல்வராக இருப்பவர் ரேணு தேவி. இவரது இல்லம் நேற்று போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. எதிர்க்கட்சிகள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த ஊக்கப்படுத்துவதுடன்  மாணவர்களை தவறான வழியில் வழிநடத்துவதாக பிஹார் மாநில ஆளும்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த துணை முதல்வர் ரேணு " எதிர்க்கட்சிகள் மாணவர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறது. அவர்களின் குண்டர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துகின்றனர். இந்த அக்னிபாத் திட்டமானது நான்கு வருட சேவை. இந்த நான்காண்டு பயிற்சி காலம் நிறைவடைந்ததும் அக்னிவீரர்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் இருக்கும்.

அக்னிவீரர்களின் நான்காண்டு பயிற்சி முடிந்ததும் அவர்களின் கையில் 12 லட்சம் நிதி இருக்கும். அவர்களுக்கு வாங்கிக்கடன்கள், மேற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள், CPAF மற்றும் ஆயுதப்படைகள் காவல்துறை ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தை பற்றி இளைஞர்களுக்கு புரிந்துவிட்டது என எண்ணிக்கொள்ளாதீர்கள்.

அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதனாலாயே பிரச்சினைகள் எழுந்துள்ளன. படிப்படியாக எல்லாம் மாறிவிடும்" என செய்தியாளர்களிடம் துணைமுதல்வர் ரேணு தேவி தெரிவித்துள்ளார். அவருடன் மற்றொரு துணைமுதல்வரான தர்கிஷோர் பிரசாத் உடனிருந்தார். மேலும் ரேணுவின் மகன் கூறுகையில் "பெட்டியாவில் உள்ள எங்கள் இல்லம் தாக்கப்படுகையில் நாங்கள் பயந்துபோய்விட்டோம்.

எங்களுக்கு நிறைய சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக அவர் சம்பவ நேரத்தில் பாட்னாவில் இருந்தார்" என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த சிலநாட்களாக பிஹார் மாநிலத்தில் ரயில்நிலையங்கள் எரிக்கப்பட்டு தண்டவாளங்கள் சேதப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர் வீடு சூறையாடப்பட்டது போல பிஜேபி தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் வீடும் போராட்டக்கார்களால் சூறையாடப்பட்டது.