பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கையில் இருந்தாலும் இங்கே திராவிடர் கழக தலைவர் வீரமணி அண்ணாமலை அரசியலை எண்ணி பதறுகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக, திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு தலைவலியாக இருந்து வருகிறார் குறிப்பாக இடதுசாரிகள் அண்ணாமலை என்றாலே சற்று பதற்றமடைகின்றனர், காரணம் அண்ணாமலை அவர்கள் கூறும் கருத்துக்கள், செய்யும் அரசியல், மக்களிடம் எடுத்து வைக்கும் வாதங்கள், அண்ணாமலை அவர்கள் கூறும் பதிலடி போன்றவை இடதுசாரிகளுக்கு சற்று பயத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக தமிழக இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலை ஏற்படுத்திய அரசியல் தாக்கம் வெகுவாக பரவி வருகிறது. திராவிடர் கழகங்கள் செய்த சதிச்செயல் இளைஞர்களை எப்படி எல்லாம் வழிமாற்றுகின்றன, இளைஞர்களை எப்படி எல்லாம் அவர்கள் போக்கிலிருந்து மது, சினிமா என மாற்றி சீரழிக்கின்றன, குடும்ப ஆதிக்கம், கடவுள் மறுப்பு என்ற பெயரில் அவர்கள் மத்தியில் நாத்திகத்தை விதைத்து அவர்களை குடும்பத்தை விட்டு விலக்கி வைத்து திராவிடர் கழகங்கள் எப்படி அரசியல் செய்கின்றன என்பது போன்ற கருத்துக்களை அண்ணாமலை அவ்வப்போகுது இளைஞர்கள் மத்தியில் பேசி வருவதால் அரசியல் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர் தமிழக இளைஞர்கள்.
இதன் காரணமாக தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை வந்த பிறகு ஆதரவு அதிகரித்துள்ளது, இன்று தமிழக பாஜக என்பது தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதற்கு காரணம் அண்ணாமலையின் இது போன்ற கருத்துக்கள்தான் என பல மூத்த பத்திரிகையாளர்களே தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது நீங்கள் யாருடன் நீங்கள் விருந்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி உடன் விருந்து சாப்பிட வேண்டும் என ஆசை, ஏனெனில் மாற்றுக் கருத்து உடையவர்களுடன் உரையாடும் பொழுது நமக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்ற வகையில் அந்த கருத்தை கூறினார்.
அப்பொழுதே அதற்கு வீரமணி கருத்து கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது, இந்த நிலையில் அண்ணாமலை இந்திய அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அனுப்பிய காரணத்தினால் இலங்கை சென்றுள்ளார் ஆனாலும் அண்ணாமலை இலங்கையில் இருந்தாலும் அண்ணாமலை அரசியல் தமிழகத்தில் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது ஆம் திராவிடர் கழக தலைவர் வீரமணி அண்ணாமலையை குறித்து பேசியுள்ளார்.
பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையத்தின் அருகே மாவட்ட சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக் கூட்டம் நடந்தது. திராவிடர் கழக தலைவர் வீரமணி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய வீரமணி கூறியதாவது, 'தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். அரசு ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது என்ற நிலையில் நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி தமிழகத்தில் 20 மசோதாவை நிறைவேற்றாமல் அதனை ஆலோசனை செய்யாமல் இருந்து வருகிறார் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
அதற்கு ஆளுநர் பதில் சொல்வதற்கு பதிலாக அண்ணாமலை பதில் சொல்கிறார். அந்த அரசு ரகசியங்கள் மற்றும் ஆவணங்களை வெளியில் சொல்லக் கூடாது என்று பதவிப்பிரமாணத்தில் இருக்கும் போது, அண்ணாமலை இடம் மசோதாவை பற்றி கூறியிருப்பதால் அண்ணாமலை வெளியே வந்து 15 மசோதாதான் பாக்கி உள்ளது. மீதமுள்ள 5 மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.
ஆளுநரின் மசோதா நிறைவேற்றத்திற்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம். அந்த ரகசியங்களை வெளியிடும் ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற வேண்டாமா என வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்பொழுது தமிழக அரசியலில் ஈரோடு இடைத்தேர்தல், கருணாநிதி பேனா போன்ற விவரங்கள் விவகாரங்கள் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் இலங்கையில் இருந்தாலும் அண்ணாமலை கூறிய கருத்துக்கள் திராவிடர் கழக தலைவர் வீரமணியை தூங்க விடாமல் செய்து வருகின்றது என்னவோ உண்மைதான் அந்த காரணத்தினாலேயே அண்ணாமலை ஊரில் இல்லை என்றாலும் அண்ணாமலையை வைத்து அரசியல் செய்து வருகிறார் வீரமணி என்ற விமர்சனங்கள் அதிகரித்து காணப்படுகிறது.