24 special

சவுக்கு சங்கர் எங்கே? பங்கு பிரிப்பு விவரத்தை வெளியில் சொல்லியதால் சிக்கலா?

savukku sankar
savukku sankar

முன்னாள் அரசு அலுவலரும் தற்போதைய அரசியல் விமர்சகருமான  சவுக்கு சங்கர் கைது செய்யப்படலாம் என வெளியான தகவலால் பரபரப்பு உண்டாகியுள்ளது. திமுக ஆட்சியின் போது "2G ஊழல்"  குறித்தும் காவல்துறை அதிகாரி மற்றும் கனிமொழி இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்த ஆடியோ பதிவை வெளியிட்டவர் சவுக்கு சங்கர்.


இதன் மூலம் அவரது இணைய பத்திரிகை விறுவிறுப்பு அடைந்தது இந்த சூழலில் திடீர் என கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர் அதன் பிறகு நீதிமன்றம் மூலம் வெளிவந்து தற்போது பல அரசியல் இயக்கங்கள் குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை பொது வெளியில் பல்வேறு யூடூப் சானல்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சவுக்கு சங்கர் கொடுத்த பேட்டி ஆளும் கட்சியை கொந்தளிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறதாம் அதற்கு காரணம் அம்பத்தூரில் லஞ்ச பணத்தை வசூலிக்க ஒரு அலுவலகமே இயங்குகிறது அமைச்சர் அடிக்கும் பணத்தில் முறையாக முதல்வர் குடும்பத்திற்கும் பங்கு சென்று விடுகிறது என வெளிப்படையாக அவர் பேசிய பேச்சுதான் காரணமாம்.

இதனால் ஆளும் வட்டாரம் கடுமையாக சவுக்கு சங்கர் மீது வெறுப்பில் இருப்பதால் அவர் எப்போது வேண்டுமானாலும் பழைய வழக்குகளில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது, சமூக வலைத்தளங்களில் பல்வேறு பிரமுகர்களை அவதூறாக சவுக்கு சங்கர் விமர்சனம் செய்து இருப்பதால் அதனை மேற்கோள் காட்டி சவுக்கு சங்கர் கைது செய்யப்படலாம் என ஒரு தகவல் உலா வருகிறது.இதனையடுத்து சவுக்கு சங்கர் எங்கே இருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சவுக்கு சங்கர் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.