ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் வெளுத்த திமுக சாயம்; அமைச்சர் ரகுபதியை லெப்ட்ரைட் வாங்கிய அண்ணாமலை! ஆன்லைன் ரம்பி விவகாரத்தில் அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காமலே திமுக அரசு நாடகமாடி வருவதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொன்ன பதிலை வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழக்கும் நபர்கள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது. எனவே ஆன்லைன் ரம்பி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அவசர சட்டம் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசிடம் சில விளக்கங்களை கேட்டு சட்டமசோதா திருப்பி அனுப்பப்பட்டது. விளக்கம் தருவதற்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு கூறியுள்ளோம். கூடிய விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மசோதா பரிசோதனையில் இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மசோதா குறித்து சில சந்தேகங்கள் உள்ளது. அதனை தெளிவுப்படுத்திக் கொண்டு, ஓப்புதல் தருவதாக கூறியுள்ளார் எனக்கூறினார்.
மேலும் 5ம் தேதி சட்டமன்றம் கூட வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவசர சட்ட மசோதாவிற்கான அரசாணை வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று
தமிழ்நாடு பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம்.தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும். ஆளும்
அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.