24 special

ஜப்பான் முன்னாள் பிரதமரை சுட்டது யார்? உலக அரசியலே மாறுகிறதா?


ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது இதற்கு இந்திய பிரதமர் மோடி உட்பட பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். ஷின்சோ அபேக்கு வயது 67. அந்நாட்டின் நாரா என்ற நகரில் மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது ஷின்சோ துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.


மேடையிலேயே மயங்கி விழுந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் நாரா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஷின்சோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது நினைவற்ற நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த பெருமையை பெற்றவர் ஷின்சோ அபே.

முதன்முதலாக 2006ஆம் ஆண்டில் அந்நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே அடுத்த ஓராண்டிலேயே உடல் நலக்குறைவால் பதவி விலகினார். பின்னர், 2012ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட அவர் 2020ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர்ந்தார். 2020ஆம் ஆண்டில் தனது உடல் நலனை காரணம் காட்டி பதவி விலகினார். தற்போது அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான தேர்தல் பரப்புரையை ஷின்சோ அபே மேற்கொண்டிருந்த போது தான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஷின்சோ அபேவை சுட்ட குற்றச்சாட்டில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பின்னால் நின்றுகொண்டு ஷின்சோவை சுட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான தகவலை அறிந்த அந்நாட்டின் பிரதமர் புமியோ ஷிடா தனது பரப்புரையை ரத்து செய்து விட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார்.

ஷின்ஷோ சுடப்பட்ட தகவல் இப்போது உலக அரசியலை புரட்டி போட்டு இருக்கிறது, தொடர்ச்சியாக சீனாவிற்கு எதிராக செயல்படும் தலைவர்கள் அரசியலில் இருந்து ஓரம்கட்ட படுவதும், அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதும் உலக அரசியலை அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, டிரம்ப் தொடங்கி போரிஸ் ஜான்சன் என இந்த பட்டியல் நீளுகிறது, இதில் முக்கிய பங்கு வகித்த ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடந்து இருப்பது ஜப்பானை மட்டுமின்றி உலக அரசியலை புரட்டி போட்டு இருக்கிறது.