24 special

பிரதமரிடம் "உளவுத்துறை" கொடுத்த அறிக்கை சிக்கிய தமிழக பாஜக தலைகள் யார் யார்?

Modi, annamalai
Modi, annamalai

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தல் பாஜகவிற்கு மிக முக்கியமானது, இதில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக கொண்டுவந்துள்ள திட்டங்கள் மக்களுக்கு சென்று அடைவதுடன் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்க சரியான தருணமாக அமையும் என்று பிரதமர் முடிவு எடுத்துள்ளார்.


இதற்காக தினமும் ஒருமணி நேரம் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு மாநிலங்களில் கட்சியின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது, மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது என பிரதமர் மோடி நேரடியாக உளவு அமைப்புகள் மூலம் கண்டறிந்து வருகிறாராம். அந்த வகையில் தமிழகத்தில் பாஜக செயல்பாடு எவ்வாறு இருக்கிறது, ஆளும் திமுக மீதான மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது என சமீபத்தில் உளவு அமைப்புகள் டெல்லிக்கு தகவல் தெரிவித்துள்ளன.

இதில் ஆளும் கட்சியான திமுகவிற்கு எதிராக கட்சிதமாக பாஜக தலைமை செயல்படுகிறது, எவ்வாறு தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் TRS கட்சிக்கு எதிராக பாஜக செயல்படுகிறதோ அதை காட்டிலும் தரவுகளுடன் பாஜக தலைமை தமிழகத்தில் செயல்படுகிறது, இருப்பினும் சில பாஜக தலைவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் பாஜக தமிழக தலைமையுடன் சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று உளவு அமைப்புகள் குறிப்பிட்டு இருக்கிறதாம்.

அத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வீழ்த்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாஜகவை சேர்ந்த சில தலைவர்கள் மறைமுக உறவு வைத்துள்ளதாகவும் விரைவில் அண்ணாமலைக்கு எதிராக தமிழக அளவில் ஊடகங்களை துணைக்கு வைத்து கொண்டு மிக பெரிய சதி திட்டம் ஒன்றை நிறைவேற்ற இருப்பதாகவும் அது என்ன அதற்கு துணை போவது யார் என அத்தனையும் பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்க பட்டு இருக்கிறதாம்.

இந்த சூழலில் பிரதமர் மோடி இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் தென் மாநில அரசியலை நேரடியாக கண்காணித்து வரும் இருவரிடம் என்ன என விசாரணை செய்யுங்கள் யார் அவர்கள் உள்கட்சிக்கு எதிராக உள்ளடி அரசியலில் ஈடுபடும் நபர்கள் எத்தகையை பெரிய இடத்தில் இருந்தாலும் தேவையில்லை நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டுள்ளாராம்.

இதை அடுத்து ஜேபி நட்டா தமிழகம் வர இருக்கிறாராம், இந்த நிலையில் பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்வது எதிர்கட்சியினர் என்றால் அதிரடியாக களம் இறங்கலாம் ஆனால் இப்போது பிரச்சனை என்பது சொந்த கட்சியினர் இடையே இருக்கிறது, எனவே அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நாளிதழ் ஒன்றில், அண்ணாமலைக்கு எதிராக செயல்படும் பாஜகவினர் என செய்தியை கசியவிட்டு எச்சரிக்கை கொடுத்துள்ளதாம். விரைவில் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பு பாஜகவில் கோஷ்டி பூசல் நீங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் எதிரிகளை சமாளிப்பது போன்றே சொந்த கட்சியில் உள்ள எதிர்ப்புகளை சந்தித்து ஆக வேண்டும் அவ்வாறு இரண்டையும் சமாளிப்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் இந்த சூழலில் அண்ணாமலைக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த சிலர் பாஜகவின் நேர் எதிரியான திமுகவுடன் கை கோர்த்து இருப்பது தெரியவந்தால் அவர்கள் சொந்த கட்சியான பாஜக தொண்டர்களின் மதிப்பை இழக்க நேரிடும் அவ்வாறு மதிப்பு இழந்தால் அவர்கள் அரசியல் எதிர்காலம் கேள்வி குறியாக மாறும் என்றே அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களின் கருத்தாக உள்ளது .

பிரதமர் மோடி பல உள்ளடி அரசியல் எதிர்க்கட்சி எதிர்ப்பு அரசியல் என அனைத்தையும் கடந்தே இந்த இடத்திற்கு வந்து இருப்பதால் அவருக்கு அனைத்தும் தெரிந்து விடுகிறதாம் போதாத குறைக்கு தினமும் ஒருமணி நேரம் ஒதுக்கி மாநில நிலவரம் குறித்து கண்காணித்து வருவதால் மட்டுமே வெற்றி நாயகனாக பிரதமர் மோடி திகழ்கிறார், அதே போல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் உண்டாகும் என்பதே பாஜகவின் தீவிர தொண்டர்களின் எதிர்பார்பாக உள்ளது.