ராகுல் காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ட்ரெயின் மூலம் சென்ற அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, இருப்பினும் திட்டமிட்டபடி கட்சியினர் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உறுதி என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இந்து மக்கள் கட்சி தெரிவித்தது பின்வருமாறு :-
நாளை(இன்று ) தமிழகம் வருகை தர உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலுக்கு எதிராக ராகுல் கோ பேக் இயக்கத்தையும் கருப்புக்கொடி காட்டும் நிகழ்ச்சியையும் நடத்துவதற்காக கன்னியாகுமரி செல்வதற்கு கோவையிலிருந்து ரயில் மூலமாக புறப்பட்டவரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைது செய்தனர்
திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார் அவரோடு கூட அவரது உதவியாளர் திரு ஹரிஹரன் திரு பொன்னுசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆளுகின்ற திமுக அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத போக்கை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு மாநில கட்சியின் தலைவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் பொழுது வீட்டுக்காவலில் வைக்கலாம் அல்லது போராட்டம் நடத்துகின்ற இடத்தில் கைது செய்யலாம் மாறாக நள்ளிரவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது சட்ட விரோதமானது தமிழக முழுக்க இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்படி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பாரதப் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிற பொழுது மோடி கோ பேக் நிகழ்ச்சி மற்றும் கருப்பு பலூன் விடுதல் கருப்புக்கொடி காட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளை திமுக நடத்தியது கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் நிகழ்ச்சிக்கு கூட இடம் ஒதுக்கி கொடுத்து பாதுகாப்பு கொடுத்தது ஆனால் ராகுலுக்கு கருப்பு கொடி காட்டுகின்ற ஒரு ஜனநாயக நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறது.
திமுகவின் காவல்துறை எதற்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் ராகுல் கோ பேக் இயக்கம் இத்தகைய தடைகளால் பின்வாங்காது ராகுல் கோ பேக் இயக்கத்தை இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் நாளை(இன்று ) நடத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.