நாளுக்கு நாள் அண்ணாமலையின் செயல்பாடு தமிழக அமைச்சர்களை தூக்கமின்றி ஆக்கி இருக்கிறது, இதில் புதிதாக நேற்றைய தினம் மாலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இரண்டு அமைச்சர்கள் ஊழல் செய்த பட்டியலை வெளியிட போகிறோம் அதன் பிறகு அவர்கள் பதவி விலகும் சூழல் உண்டாகும் என தெரிவித்து இருப்பது பல தமிழக அமைச்சர்களை தூக்கமின்று புலப்பவைத்து இருக்கிறது.
பல அமைச்சர்கள் தங்களுக்கு நெருக்கமான ஆடிட்டர் மற்றும் முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நமது தரப்பில் ஏதேனும் விஷயங்கள் லீக் ஆனதாக பாருங்கள் என இரவோடு இரவாக விசாரிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அண்ணாமலை நேற்றைய தினம் அளித்த பேட்டியில்
கச்சத்தீவு விவகாரத்தில், பாஜக நல்ல முடிவை எடுக்கும். ஸ்டாலின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டி முதல் கோபாலபுரம் வரை தான். ஆனால், பிரதமர் மோடியின் அரசியல், இந்தியாவை தாண்டி உலக அரசியலுக்கு சென்று விட்டது.
தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, 31ம் தேதி கோட்டை நோக்கி நடைபயணம் நடத்தப்படும். சினிமா குத்தகை, பொங்கல் பரிசு தொகுப்பு, மின்சாரம் கொள்முதல் என, பல ஊழல்கள் நடந்துள்ளன. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.
ஜூன் முதல் வாரத்தில், தி.மு.க., அரசின், 100 கோடி ரூபாய், 120 கோடி ரூபாய் என, இரு ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன். இதனால், அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம்.அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறை வாரியாக, அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முறை அண்ணாமலை 100 கோடி மற்றும் 120 கோடி என ஊழல் கணக்கை கூறியும் சரியாக நாள் குறித்தும் இருப்பதும் அதனை பத்திரிகையாளர் மத்தியில் வெளிப்படையாக அறிவித்து இருப்பதும் நிச்சயம் அண்ணாமலை ஊழல் குறித்த ஆதாரங்களை வெளியிட போகிறார் என்ற ஒரு செய்தி மட்டும் உண்மை என அறிய முடிகிறது.
இந்த சூழலில் பல்வேறு அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம் அதில் குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய அமைச்சர் மிக பெரிய அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது, ஏற்கனவே பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது இப்போது அண்ணாமலை ஏதாவது ஒரு குற்றசாட்டை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினால்.
பதவி பறிபோகுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் பதவி பறிபோனால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ரவுண்டு கட்டினால் சிறைக்கு செல்லவேண்டிய சூழல் உண்டாகலாம் என்பதால் தூக்கமின்றி 10-ற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கிறார்களாம், அண்ணாமலை குறித்தோ பாஜக குறித்தோ பல அமைச்சர்கள் விமர்சனம் செய்வதற்கே பயப்படுகிறார்களாம்.
சமீபத்தில் கூட மூத்த அமைச்சர் ஒருவரிடம் பாஜக குறித்தும் அண்ணாமலை குறித்தும் கேள்வி கேட்க நிருபரை பார்த்து என்னை வம்பில் சிக்க வைக்க வேண்டுமா என கூறி ஓட்டம் எடுத்துள்ளார் மிக நீண்டகால அரசியலில் உள்ள அமைச்சர், அந்த அளவில் பாஜக தமிழகத்தில் குறிப்பாக அமைச்சர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக மத்திய உளவுத்துறையை சேர்ந்த பல அதிகாரிகள் இரவு பகலாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனராம், போதாத குறைக்கு தற்போதைய திமுக ஆட்சியில் ஓரம்கட்டபட்ட முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிலர் எங்கு என்ன நடக்கிறது என்ற தகவலை பாஜக தலைமை கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பல வழிகளில் பாஜகவிற்கு தகவல்கள் கிடைப்பதால் ஒவ்வொரு அமைச்சரையும் டீல் செய்ய அண்ணாமலை தரப்பு தயாராகி வருகிறதாம் முதலில் இரண்டு அமைச்சர்கள் என பத்திரிகையாளர் பேட்டியில் சொன்னாலும் 5 அமைச்சர்கள் வரை தகவலை திரட்டி வைத்து இருக்கிறார்களாம்.
KGF படத்தில் ஆட்சி அதிகாரம் என அனைத்தும் இருந்தும் ஆட்சியில் இருப்பவர்கள் ராக்கியை பார்த்து அச்ச படுவது போல், தமிழகத்தில் சர்வ அதிகாரத்துடன் இருக்கும் அமைச்சர்கள் இப்போது பாஜகவையும் அண்ணாமலையையும் நினைத்து அச்சம் கொள்ளும் சூழல் உண்டாகி இருப்பதாகவே பார்க்க படுகிறது.