24 special

நிறைவேறுகிறதா காந்தியின் கனவு..! அடுத்த ஆப்பு..!

rahul gahdhi
rahul gahdhi

ராஜஸ்தான் : தேசப்பிதா மஹாத்மா காந்தியின் கனவை பிஜேபி ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறது. அதேபோல அண்ணல் அம்பேத்காரின் ஆசைகளையும் அவரது கனவுகளையும் நிறைவேற்றி பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த இலக்கை பிஜேபி அடைந்துள்ளது. காந்தியின் மிக முக்கியமான கனவான காங்கிரசை கலைப்பது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பிஜேபியை விட காங்கிரஸாரே மும்முரமாக செயல்பட்டுவருகின்றனர்.


இந்நிலையில் காங்கிரசின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் எம்பிக்கள் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வெளியேறுகின்றனர். ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு நெருக்கமாக இருந்தவரும் கடந்த வாரம் காங்கிரசிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பம் சீரடைவதற்குள் ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் தனது ராஜினாமாவை அறிவிக்க இருப்பது மேலும் புயலை கிளப்பியுள்ளது.



ராஜஸ்தான் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சாராக இருப்பவர் அசோக் சந்தனா. இவர் முதல்வரின் வலதுகரம் என அறியப்படுகிறார். இவர் தனது நேற்றைய டீவீட்டில் " முதலமைச்சர் அவர்களே இந்த கொடுமையான அமைச்சர் பதவியில் இருந்து என்னை தயவு செய்து விடுவித்து விடுங்கள். என்னுடைய அனைத்து துறைகளின் பொருட்களையும் உங்களது முதன்மைச்செயலாளர் குல்தீப் ரங்காவுக்கு கொடுத்துவிடுங்கள்.

தனிப்பட்ட முறையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் அவர் எல்லாத்துறைகளுக்கும் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்" என அமைச்சர் சந்தனா தனது டீவீட்டில் தெரிவித்துள்ளார். இவரது டீவீயின் மூலம் முதன்மைச்செயலாளரின் குறுக்கீடுகள் மற்றும் தொந்தரவுகள் அமைச்சருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் கபில் சிபலை போல விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியில் அவர் இணைய வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து  வருவது குறிப்பிடத்தக்கது.