உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மத்திய அரசு தனி விமானங்கள் போர் விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது எந்த நாடும் செய்யாத பணியை இந்தியா செய்து வருவதாகவும் தனது நாட்டு பிரதிநிதிகளை மீட்க இந்தியா மிக பெரும் சவாலை கடந்து செய்துவருவதாக உலக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இருந்து குழு ஒன்றை அமைத்தார், இந்த குழு உக்ரனில் சிக்கிய தமிழர்களை மீட்கும் எனவும் தெரிவித்தார், முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது மாநில அரசு எப்படி வேறு நாட்டில் சென்று பணியை செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில் ஸ்டான்லி ராஜன் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-உக்ரைன் மீட்பு பணிக்கு அனுமதி கேட்டு தங்கள் முதல்வர் எழுதிய கடிதத்தோடு நின்ற தமிழக எம்பிக்களுக்கு மத்திய வெளியுறவுதுறை கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக கிளம்பிய இந்த திமுக குழுவும் அதன் தலைவரும் ஒன்றை மறந்துவிட்டார்கள் அல்லது மறைத்தே விட்டார்கள், ஆம், உக்ரைனில் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் குழுவின் தலைவரே அதாவது இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரே ஒரு தமிழர்.
அந்த தமிழரிடம் போய் நாங்கள் தமிழர்கள் தமிழக மாணவர்களை மீட்க அனுமதி வேண்டும் என்றால் என்னாகும்? அவரின் அலுவலகம் இதை கேட்டு சிரிப்பாய் சிரிக்காதா?
"அய்யா அங்கு யாரும் தமிழ் பாஸ்போர்ட் கொண்ட தமிழ் மாணவர்கள் அல்ல, எல்லோரும் இந்திய மாணவர்கள், அவர்கள் உள்ளிட்ட எல்லோரையும்தான் மீட்டு கொண்டிருக்கின்றோம், தமிழக மாணவர்களும் திரும்பிகொண்டே தான் இருக்கின்றார்கள் அது தெரியவில்லையா?
உக்ரைனில் நடப்பது ஒலிம்பிக் போட்டி அல்ல, இந்திய ராணுவமே செல்லமுடியா இடத்துக்கு உங்களை அனுப்பினால் உங்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? அங்கு நீவீர் சிக்கி கொண்டால் நாங்கள்தான் காக்க வரவேண்டும் கூடுதல் சிக்கல்
இதோ பாருங்கள், இந்தியாவில் எத்தனை மாகாணம் உண்டு என தெரியுமல்லவா? எல்லா மாகாணமும் அங்கே மீட்புகுழுவினை அனுப்பினால் கப்பலில்தான் செல்ல வேண்டும், அதுவும் நீங்களே போய் நீங்களேதான் திரும்பி வரவேண்டும் அதெல்லாம் சாத்தியமா?
தமிழத்தார் சார்பாக நாங்கள் செல்லவேண்டும் என்கின்றீர்கள் ஆனால் இந்த குழுவின் தலைவரே தமிழர் ஜெய்சங்கர் என்பதை மறக்கின்றீர்கள்" என சொன்னவுடன் 4 பேரும் திரும்பிவிட்டார்கள், இந்த தமிழ் குருவின் சீடர்கள் 4 பேரும் தங்களுக்கு அனுமதி கிடக்கா நிலையில் உக்ரைனில் தமிழ் மாணவர்களுக்கு இந்தி புரியவில்லை என கிளம்பிவிட்டார்கள்.
இதுதான் அவர்கள் அந்த மர்ம குருவுக்கு சீடர்கள் என்பதை உலகுக்கே சொல்கின்றது, அம்மாணவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி அறிந்தவர்கள், இது போக உக்ரைன் மொழியும் கட்டாயம் கற்றவர்கள். அங்கே அறிவிப்பானது இந்தியாவின் தேசியமொழி உக்ரைன் மொழி ஆங்கிலம் என பல மொழிகளில் செய்யபடும், அதை மாணவர்கள் புரிந்து கொள்வது சிரமமான விஷயம் அல்ல.
அங்கே இந்தி ஆங்கிலம் உக்ரைனிய மொழி தவிர இந்தியாவின் "செப்பு மொழி 18" மொழியும் பேசிகொண்டிருக்க அங்கு ஒன்றும் செம்மொழி மாநாடு நடக்கவில்லை, அது யுத்த பூமி, இந்தியாவின் தேசியமொழி இந்தி, ஒரு இந்தியனின் மொழியாக அதுதான் வெளிநாட்டில் அறியபடுகின்றது அப்படிபட்ட இந்தியனுக்கு தன் நாட்டின் தேசியமொழி தெரியாது ஆனால் தேசிய பாஸ்போர்ட் உண்டு என்பதெல்லாம் மாபெரும் காமெடி.
இந்த காமெடியினை உருவாக்கியவர்கள் யாரென்றால் இதே திமுகவினர், இப்பொழுது இந்தி தெரியாமல் தமிழக மாணவர்கள் தவிக்கின்றனர் என கண்ணீர்விடுவதும் அவர்களே"இந்தி தெரியாது போடா" என்றவர்கள் இவர்களே, இப்பொழுது "அய்யாயோ இந்தி தெரியாது பிளீஸ்டா" என கெஞ்சுவதும் இவர்களே
ஆக நாம் முன்பே சொன்னபடி தமிழக உக்ரைன் மீட்பு குழு இந்தியாவினையே தாண்டமுடியாமல் திரும்பிவிட்டது, இனி இவர்கள் புகார் செய்யவேண்டியது ஐ.நாவில்தான், ஐ.நாவோ புட்டீனை ஒன்றும் செய்ய முடியா கடுப்பில் இருக்கின்றது, இனி இவர்கள் புகார் அளித்தால் இந்த வார்த்தைதான் சொல்லும்.
முதலாவது இதெல்லாம் உங்கள் தேசிய அரசு பேசவேண்டியது அவர்கள் பேசட்டும், இரண்டாவது தனிநாடு வாங்கிவிட்டு வாருங்கள் 194ம் நாடாக உங்களை சேர்க்க முயற்சிக்கின்றோம், முன்பு தனி தமிழ்நாடு வாங்கத்தான் பிரபாகரன் முயற்சித்தார் அதை நீங்கள் முயன்றால் என்ன என திருப்பி கேட்பார்கள், அதன் பின் இந்த சீடர்கள் 4 பேரும் அங்கு நிற்பார்களா என்ன?
முன்பொரு காலத்தில் குரு சீடர்கள் காமெடி கதை விஷேஷம், அதை இப்பொழுது நேரடியாக பார்க்கும் பாக்கியம் இந்திய தமிழக மக்களுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது எனவும் நக்கலாக பதிவு செய்துள்ளார்.
More Watch Videos