24 special

தமிழச்சியின் செல்போனை திருடியது யார்? டெல்லியில் அரங்கேறிய பரபரப்பு? என்னமா ஆக்ட் கொடுக்குறாங்க..!

Tamilachi
Tamilachi

தமிழகத்தை சேர்ந்த திமுக எம். பி தமிழச்சி தங்கபாண்டியனின் செல் போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் அந்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட முன் கூட்டியே நடத்தப்பட்ட ஒத்திகையின் அடிப்படையில் நடைபெற்று இருக்கலாம் என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


டெல்லியில் கட்டப்பட்ட திமுக அலுவலகம் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு வெளியே வந்த திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுடன் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்த போது அவரது பர்ஸில் இருந்த விலை உயர்ந்த ஐபோன் திருடுபோயுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் அவரது செல்போன் மட்டுமல்லாமல் மொத்தம் 9 நபர்களின் செல் போன் திருடப்பட்டு இருப்பதும் குறிப்பாக செல்பி எடுப்பது போன்று அருகில் சென்று கவனத்தை திசை திருப்பி அதே குழுவை சேர்ந்த மற்றொரு நபர்கள் செல்போனை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 

இதில் மேலும் மூன்று பிரபலங்களின் செல் போன் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது, திமுக திறப்பு விழாவிற்கு வெளியில் இருந்து ஆட்களை ஏற்பாடு செய்த உள்ளூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கிடைத்த புகைப்படங்களை கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனராம்.

உண்மையில் செல்போனை திருடர்கள் திருடினார்களே அல்லது ஏதேனும் தகவலை திரட்ட வேறு ஏதேனும் கும்பல் கைவரிசையை காட்டியதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறதாம், தமிழச்சி செல்போன் திருடு போன விவகாரம் வெளியில் வந்த நிலையில் மற்றொரு பிரபலத்தின் பெயர் வெளியில் வந்தால் அது கட்சி அலுவலகம் பெயரும் அடிபடும் என்பதால் அமைதியாகி விட்டார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

மொத்தத்தில் டெல்லி மாடல் அரசு என கெஜ்ரிவால் தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்து பள்ளிகளை காட்ட, கட்சி நிகழ்ச்சியில் விஐபி கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் செல் போனை ஆசாமிகள் திட்டம் போட்டு திருடி இருப்பதன் மூலம் டெல்லி மாடல் அரசின் உண்மை நிலை தெரியவந்துள்ளது.

செல்பி எடுப்பது போன்று நாடகம் நடத்தி செல்போனை திருடி சென்ற கும்பல் யாராக இருக்கும் என்பது இரண்டு நாளில் தெரியவரும் என்கின்றன டெல்லி காவல்துறை வட்டாரங்கள்.