Cinema

வடிவேலு சொன்ன மாதிரி சல்லி சல்லியா "உடைச்சிட்டாங்களே" பாஸ்.. இதற்கு காவி குறியீடு தேவையா?

vadivelu and vijay
vadivelu and vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தில்  நடித்துள்ளனர்.


பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் 'பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்' என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாவதை மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் திரையரங்கு முன்பு விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் நேற்று தனியார் திரையரங்கு ஒன்றில் வெளியிட பட்டது அப்போது விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர்.

ட்ரைலரை பார்த்துவிட்டு வெளியே வந்த பலர் இந்த கதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு என யோசிக்க, பலரும் யோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் அதே போன்று மால், தீவிரவாத தாக்குதல், ஹீரோ தனி ஒருவனாக காப்பாற்றுவது என அப்படியே கதை இருக்குமோ என சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், மேலும் திரைப்படத்தில் ராணுவ போர் விமானத்தில் பறக்கும் நடிகர் விஜய், பிரான வாயு இல்லாமல் இருப்பதும், ஹெல்மெட் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டிய நெட்டிசன்ஸ்.,

இப்படி விஜய் ராணுவ விமானத்தை இயக்கினால் எதிரிகள் சுட தேவையில்லை, ஆக்சிஷன் கிடைக்காமல் அவரே மூச்சு திணறி இறந்துவிடுவார் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர், விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை கொண்டாட காத்து கொண்டு இருக்க, ட்ரைலர் மூலம் அதனை சல்லி சல்லியாக உடைத்து விட்டனர் என்ற விமர்சனம் அதிகரித்து காணப்படுகிறது.


அது மட்டுமல்ல ப்ரூஸ் வில்லிஸ் நடித்து 1988ல் வெளிவந்த ஹாலிவுட் படமான 'டை ஹார்ட்' படத்தின் அப்பட்டமான காப்பி என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். சீனத் திரைப்படமான 'ரிட்டர்ன் ஆப் ஸ்பெஷல் போர்சஸ் 5' என்ற படத்தின் சாயலும் இந்த 'பீஸ்ட்' படத்தில் உள்ளது என்கிறார்கள்.மேலும், டிரைலரில் இடம் பெற்றிருந்த பின்னணி இசை அமெரிக்காவில் பத்து வருடங்களுக்கு முன்பு வந்த ஆல்பம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என்றும் இரண்டின் வீடியோக்களும் சமூக வலைத்தளங்கள், வாட்சப் ஆகியவற்றில் பரவி வருகிறது. விஜய் நடித்து வெளியாகும் படங்களின் டிரைலர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறைதான் இத்தனை சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவு சர்ச்சைகளை வைத்து கொண்டுதான் காவி நிறத்தை கிழித்து கொண்டு விஜய் வருகிறார் என பில்டப் கொடுக்கிறார்களா எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.