கேரளா சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அம்மாநில முதல்வர் பின்றாயி விஜயனிடம் முல்லை பெரியாறு அணை குறித்து பேசாதது அதிர்ச்சியை கொடுப்பதாக பாஜக விவசாய அணி மாநில தலைவர் GK.நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :-
கேரள முதலமைச்சருடன் நட்பு பாராட்டும் முதலமைச்சர் முல்லைபெரியாறு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். பேபி அணையை வலுப்படுத்த நிதி ஒதுக்க வேண்டும். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கண்ணூர் மாநாட்டில் கலந்துகொண்டு விருந்துண்டு,கலந்துறவாடி,நட்பு பாராட்டிய தமிழக முதலமைச்சர் முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்து அவரிடம் பேசாதது அதிர்ச்சியளிக்கிறது.
அங்கு மத்திய அரசுக்கு எதிராக முதல்வர்கள் குழு அமைத்து, இந்தியாவைக் காப்பாற்றப்போவதாக அறிவிக்கும் முதலமைச்சர் முல்லைப்பெரியாறு பிரச்சனையால் ஐந்து மாவட்டங்கள்(தேனி,மதுரை,திண்டுக்கல்,விருதுநகர்,சிவகங்கை) ஆனைமலை-நல்லாறு, பாண்டியாறு-புன்னம்புலா உள்ளிட்ட தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படவில்லை.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதிய அணை என்ற பேச்சுக்கு இடமில்லை. அணை பலமாக உள்ளது. அணையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கமிட்டியே செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கேரளா குமிளியில் அமைந்துள்ள கண்காணிப்புக்குழு அலுவலகத்திற்கு வாடைகையும்,அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுப்பதும் தமிழக அரசு.
உலகிலேயே மிகவும் பலமான அணையாக 1269 அடி நீளமும்,200 அடி அகல அஸ்திவாரமும்,21 அடி மேல்பாகமும் கொண்டது. முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது என்று சான்றிதழ் கொடுத்தவர் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேபி அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த,நிதி ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும்.முல்லைபெரியாறு அணை என்பது மேற்கூறிய ஐந்து மாவட்டங்களின் நீராதார,வாழ்வாதாரப் பிரச்சனை..எனவே கேரள அரசுடனான நட்புறவை தமிழகத்தின் நீராதாரப் பிரச்சனைகளை பேசித்தீர்க்க பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.