Cinema

விஜய் பேட்டி மூலம் H. ராஜா கூறியது மீண்டும் நிரூபணமானது...! கடைசி வரை அதை சொல்லவே இல்லை..!

H.raja and vijay
H.raja and vijay

நடிகர் விஜய் 10 வருடங்களுக்கு பிறகு தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார், இந்த பேட்டியில் முதலில் அவர் தெரிவித்த முக்கிய கருத்துக்களை பார்க்கலாம் :-


கேள்வி : ஏன் பல வருடங்களாக பேட்டி கொடுக்கவில்லை? பதில் : "10 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு நடந்தது. நான் கூறியதை வேறு விதமாக பத்திரிகையில் எழுதியதால் நான் கூறிய அர்த்தம் வேற விதத்தில் மக்களிடம் சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து சில காலம் பேட்டியளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அப்படியே பத்து வருடம் ஓடிவிட்டது. பேட்டியளிக்காததன் காரணமாகவே நான் பேச நினைத்தது எல்லாம் படத்தின் ஆடியோ நிகழ்வில் பேசி விடுகிறேன்.

கேள்வி : கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?   பதில் :- "நான் கடவு நம்பிக்கை உள்ளவன்தான். ஆன்மிகம் சார்ந்த இடங்களுக்கு செல்லும்போது நல்ல அனுபவம் கிடைக்கும். நான் தேவாலயங்களுக்கு மட்டும் போகவில்லை. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் சென்றிருக்கிறேன். கடப்பாவில் உள்ள தர்காவுக்கும் சென்றிருக்கிறேன். அங்கும் எனக்கு ஆன்மிக அனுபவம் கிடைத்திருக்கிறது. என் அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர்... என்னை இந்தக் கடவுளைதான் கும்பிட வேண்டும், இங்குதான் செல்ல வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியது இல்லை. அதனைதான் நான் என் குழந்தைகளுக்கும் கூறுகிறேன்.

தளபதியில் இருந்து தலைவராக மாற விருப்பம் இருக்கிறதா? (அரசியலுக்கு வருவது குறித்து மறைமுக கேள்வி? "என்னை ’தளபதி’யாக்கியது ரசிகர்கள்தான். என்னை ’தலைவன்’ ஆக்கவேண்டுமா இல்லையா என்பதையும் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ரசிகர்களும், சூழலும் அதனை வலியுறுத்தினால் அதனை எதிர்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை, நான் விஜய்யாக இருப்பதுதான் பிடித்திருக்கிறது.

உங்கள் ரசிகர்கள் பற்றி கூறுங்கள்? ரசிகர்களில் சிலர் உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற எனது ரசிகர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை தொடர்ந்து நான் கவனித்து வருகிறோம். அவர்கள் உளமாற மக்களுக்கு பணி செய்கிறார்கள். அவர்களை நினைத்து மகிழ்ச்சிதான்.""நான் சாதரணமாக செய்ததுதான்... அதில் எந்த உள்நோக்கமும் இல்லை" இதுதான் விஜய் பேட்டியின் முக்கிய அம்சங்கள்.

விஜய் பேட்டியின் மூலம் மூன்று விஷயங்கள் தெளிவாக தெரியவந்துள்ளது ஒன்று விஜய் பீஸ்ட் பட ட்ரைலரில் நான் அரசியல்வாதியல்ல ராணுவ வீரர் என குறிப்பிட்டு இருப்பார், ஆனால் நிஜத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அரசியலுக்கு வந்ததை வரவேற்றும் வரும் காலத்தில் சூழலை பொறுத்து அரசியலுக்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் மெர்சல் திரை படத்தில் GST குறித்து தவறான காட்சிகள் இடம்பெற்ற சூழலில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் H. ராஜா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார், விஜய் தான் ஒரு கிறிஸ்தவர் என்ற உண்மையை மறைத்து விஜய் என்ற இந்து பெயரில் மறைந்து கொள்கிறார், நேர்மையாக நான் கிறிஸ்துவன் என்று சொல்ல எந்த காலமும் விஜய்க்கு தைரியம் இருக்காது என குறிப்பிட்டார்.

அது விஜய்யின் பேட்டி மூலம் நிரூபணமாகியுள்ளது, விஜய் தன் தந்தை கிறிஸ்துவர் அம்மா இந்து என்று சொல்கிறாரே தவிர கடைசிவரை தான் என்ன மதத்தை பின்பற்றுகிறேன் என விஜய் நேரடியாக பதில் சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.