![udhayanithi, jaffer sadiq](https://www.tnnews24air.com/storage/gallery/EE5G6VypwZ0VyGs4hZa9wfGvRKqNEXrbadGM2Bmk.jpg)
தமிழக மக்களை தற்போது மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ள சம்பவமாக இருப்பது போதை பொருள் கடத்தல் விவகாரம்! ஏனென்றால் சர்வதேச அளவில் கொடிகட்டி பறந்து வந்த போதைப் பொருட்களின் முக்கிய புள்ளி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்து முதல்வருடனும் முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடனும் அதிக நெருக்கம் கொண்டவர்! அதுமட்டுமின்றி 2013 ஆம் ஆண்டு மிக முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட ஜாபர் சாதிக் அந்த வருடம் முழுவதும் தலைமறைவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படி முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட ஒருவர் எப்படி 2021 திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கும் பொழுது திமுகவில் இணைந்து ஒரு அதிகாரம் படைத்த நிர்வாகியாக தமிழகத்தில் சுற்ற முடிந்தது என்ற கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது! இதனை அடுத்து ஜாபர் சாதிக்கை கைது செய்யும் நடவடிக்கைகளில் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் பிடிபட்ட போதை கடத்தல் கும்பலுக்கும் ஜாபர் சாதிக்கும் தொடர்பு இருப்பதை அறிந்த அதிகாரிகள் இதுகுறித்த தீவிர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பே ஜாபர் சாதிக் தலைமறைவானதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இவருடன் கூட்டு சேர்ந்து போதை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக் சகோதரர் சலீமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர்!
ஆக போதைப் பொருள் கடத்தலில் முக்கிய குற்றவாளிகளாக இருப்பவர்கள் கட்சியில் சேர்ந்து அதிகாரம் படைத்தவர்களாக இருந்துள்ளார்கள் என்ற தெளிவும் தற்போது மக்களுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போதை கடத்தல் விவகாரங்களில் அரசியல் பிரமுகர்களுக்கும் சினிமா வட்டாரங்களுக்கும் முக்கிய தொடர்பு இருக்கலாம் என்ற கருத்தை அரசியல் விமர்சகர்கள் முன் வைத்திருந்தனர். அதற்கேற்றார் போல் டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு முக்கிய அரசியல் பிரமுகர்களும் திரை வட்டாரத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களும் வந்து சென்றதாக கூறுகின்றனர். அதோடு அவர்கள் ஜாஃபர் சாதிக்கின் வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது பெரிய பெரிய பேக்குடன் சென்றதாகவும் கூறுகிறார்கள்.
இதனால் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு இருந்தால் அரசியல் பிரமுகர்களையும் நட்சத்திரங்களையும் பட்டியலிட்டு அவர்கள் குறித்த விவரங்களையும் அதிகாரிகள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு அதிகாரிகள் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீசை கொடுத்துள்ளது மேலும் அவரது எட்டு வங்கி கணக்குகளையும் முடக்கியது. அதுமட்டுமின்றி போதை கடத்தலில் முக்கிய குற்றவாளியாக தேடப்படுகின்ற ஜாபர் சாதிக் அடிக்கடி கென்யா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வந்ததாகவும் அதிலும் குறிப்பாக கடந்த மாதம் 17ஆம் தேதிக்கு முன்பு ஜாஃபர் சாதிக் கென்யாவிற்கு செல்லும்போது அவருடன் சில நபர்களும் சென்றதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அதனால் ஜாபர் சாதிக் உடன் சென்ற நபர்கள் குறித்த விவரங்களையும் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் போதைப் பொருள் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்காக கென்யா நாட்டிற்கு இவர்கள் சென்றார்களா கென்யாவை போன்று இன்னும் எத்தனை நாடுகளுக்கு ஜாபர் சாதிக் எத்தனை முறை சென்றுள்ளார் அவருடன் சென்றவர்கள் யார் யார் என்ன நோக்கத்திற்காக அவர்கள் சென்றனர் என்பது குறித்த தகவலையும் டெல்லி போலீசார் பட்டியலிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தின் முக்கிய புள்ளி கைது செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாகி வருவது சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வயிற்றில் புளியை கரைப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.