![annamalai, jaffer sadiq](https://www.tnnews24air.com/storage/gallery/qndYyWWdiycts2ZKvMc9oxfrPkejuwEcqHqgFnOR.jpg)
சமீப காலமாக போதை பொருளின் கடத்தல் விவகாரம் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த 75 கோடி ரூபாய் மதிப்பிலான சூடோபெட்ரின் என்ற வேதிப்பொருளை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வேதிப்பொருள் மூலம் பல லட்சம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் இந்த வேதிப்பொருள் கடத்தல் ஈடுபட்டவர்களுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக தமிழகத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக் இருந்துள்ளார் என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.ஆனால் போதை கடத்தலில் ஒரு கும்பல் டெல்லியில் மாட்டிக்கொண்டது என்ற விவரத்தை தெரிந்த அடுத்த நிமிஷத்திலிருந்து ஜாபர் சாதிக் தலைமறை ஆகிவிட்டார்! இவர் மட்டுமின்றி இவரது சகோதரர் சலீம் மற்றும் இன்னும் சில நண்பர்கள் குடும்பத்தினர் அனைவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
அதனால் ஜாபர் சாதிக் பிடிப்பட வேண்டிய நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கும்பலே கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான வேதிப்பொருட்களை கடத்தியதும் தெரியவந்துள்ளது. ஏனென்றால் சர்வதேச அளவில் மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருளுக்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உள்ளதாகவும் இவற்றை சூடோபெட்ரின் என்ற வேதிப்பொருட்களை பயன்படுத்தி தான் தயாரிக்கிறார்கள் அதனால் இந்த வேதிப்பொருளின் தேவையானது சர்வதேச சந்தையில் அதிகமாக இருந்ததையும் பயன்படுத்தி கொண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கிலோ கணக்கில் 1.50 கோடி ரூபாய்க்கு இந்த வேதிப்பொருளை விற்று உள்ளனர்! அதே சமயத்தில் இந்த வேதிப்பொருள் நம் நாட்டின் மருந்து தயாரிப்பிற்கு சட்டபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் இதனை பலர் கடத்தி போதைப்பொருள் தயாரிப்பதற்கு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர்.
இதனை அந்தந்த நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்திய நாட்டின் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது. மேலும் இந்த வேதிப்பொருள் டெல்லியில் இருந்து கடத்தப்படுவதாகவும் அமெரிக்காவின் போதை தடுப்பு பிரிவு இந்தியாவை எச்சரித்துள்ளது, இதனை தொடர்ந்தே டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் ஈடுபட்டு இந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய நெட்வொர்க்கின் தலைவர் தமிழகத்தில் சுதந்திரமாக திரிந்துள்ளார் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளதாக அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, போதை கடத்தலின் முக்கிய மூலையாக திமுக மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுடனும் அமைச்சர் உதயநிதியுடனும் அதிக நெருக்கம் கொண்டவர் மேலும் தமிழகத் திரையுலகின் தயாரிப்பாளராக இருந்து டிஜிபி கையில் விருதையும் பெற்று சுதந்திரமாக இருந்தவர்.
அதனால் இவர்கள் போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தான் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது, ஒரு பக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா புழக்கம் அதிகரிப்பதும் இன்னொரு பக்கம் போதிப்பொருள் கடத்தலின் முக்கிய மூலையாக இருக்கக்கூடிய ஒருவர் திமுகவிலும் மற்றொருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார். இந்த நிலையில் கடத்தப்பட்ட போதை பொருள் குறித்த திடுகிடும் தகவலை சோழர் சங்கத்தமிழன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திய போதை பொருள் சாதாரண போதை பொருள் அல்ல காம உணர்வை தூண்டக்கூடிய போதை மருந்து என்றும் இந்த கடத்தலை சாதாரணமாக செய்துவிட முடியாது உலக அளவில் தொடர்பு கொண்டவர்களால் மட்டுமே செய்ய முடியும் என்று சோழர் சங்கத்தமிழன் கூறியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நெட்ஒர்க்கை பிடித்து அம்பலப்படுத்தியவர் அண்ணாமலை உடன் IPS பயிற்சியில் இருந்தவர் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை.