குஜராத் : இந்தியாவை சாதிரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்துவைத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் நீண்டகாலம் வைத்திருந்தவன் பரங்கித்தலையன். அவனுடைய அதே பார்முலாவை கைக்கொண்டு இந்திய மக்களை காங்கிரஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்துள்ளது என பிஜேபி உட்பட முன்னாள் காங்கிரஸாரே குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் குஜராத் காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் ஒரு கூட்டத்தில் காங்கிரசின் தில்லுமுல்லுகளை பகிரங்கமாக கூறினார். குஜராத்தில் இந்த 2022 டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பல அரசியல் கட்சிகள் குஜராத்தில் கூடாரமிட்டுள்ளனர். இதனிடையே நாய்கள் சிறுநீர் கழித்த செங்கற்களையே ராமர் கோவில் கட்ட பயன்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து காங்கிரசில் இருந்து விலகியிருந்த ஹர்திக் படேல் "காங்கிரஸ் எப்போதும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலேயே செயல்படுகிறது. எப்போதும் ஹிந்து மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க முயல்கிறது என முன்னரே கூறியிருந்தேன். இன்று ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் குஜராத் காங்கிரஸ் தலைவரும் ராமர் கோவில் செங்கற்களில் நாய் சிறுநீர் கழிக்கிறது என கூறியுள்ளார்.
காங்கிரசையும் அதன் தலைவர்களையும் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். பகவான் ஸ்ரீ ராமர் மீது உங்களுக்கு என்ன விரோதம். ஹிந்துக்களை ஏன் இவ்வளவு வெறுக்கிறீர்கள். பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு ஸ்ரீராமருக்கு ஆலயம் எழுப்பப்படுகிறது. இதை எதிர்த்து எத்தனை முழக்கங்கள் எத்தனை கோஷங்கள். ஏன் இன்னும் ஹிந்துக்களை மட்டும் குறிவைத்து விமர்சிக்கிறீர்கள். காங்கிரஸ் தலைவர்கள் அயோத்தி ஸ்ரீராமர் குறித்து தொடர்ந்து எதிரான அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றனர்" என ஹர்திக் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை காங்கிரசிலிருந்து விலகிய ஹர்திக் பிஜேபியில் இணையவுள்ளார் என யூகங்கள் உலவிய நிலையில் கார்த்திக்கின் இந்த பேச்சு அவரை காவி என முத்திரை குத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.