24 special

கே.என் நேருவை "விமர்சனம்" செய்த செந்தில் எம்பி திமுகவில் இருந்து நீக்கமா? கடும் மோதல்..!

K.N nehru and dmk senthi
K.N nehru and dmk senthi

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என் நேருவை அரசியலில் மிகவும் இளையவரான திமுக எம்பி செந்தில் மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கும் சம்பவம் திமுக தலைவர்கள் இடையே உரசலை உண்டாக்கியுள்ளது.


தமிழக அமைச்சர் கே.என் நேரு ,மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார், அப்போது நாற்காலியில் அமராமல் கீழே அமர்ந்து மரியாதை செலுத்தினார் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது இந்த சூழலில் திமுகவை சேர்ந்த தர்மபுரி எம்பி செந்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில்.,

கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை.,So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்., ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம்,பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே என மறைமுகமாக கே.என் நேருவை விமர்சனம் செய்து இருந்தார்.


இது திமுக தரப்பினர் இடையே விவாதத்தை உண்டாக்கியுள்ளது திமுகவில் உள்ள ஒரு தரப்பினரே ஏன் செந்திலுக்கு தேவையில்லாத வேலை அவரது நாத்திக கொள்கையை அவரோடு வைத்துக்கொள்ள வேண்டியது தானே ஏன் இப்படி விவாதம் செய்து பேசு பொருளாக மாற்றவேண்டும், ஏற்கனவே தயாநிதி மாறன் மீது குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

சன் டிவி மற்றும் தினகரன் மீது கடும் குற்றசாட்டுகளையும் இதற்கு முன்பு முன்வைத்துள்ளார், இவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர் திருச்சி வட்டார திமுகவினர், இந்த சூழலில் செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏற்கனவே தயாநிதி மாறன் தரப்பு தலைமையிடம் முறையிட்டு இருக்கிறதாம்.

தற்போது நேரு தரப்பும் தலைமையிடம் தெரிவித்து இருப்பதால் செந்தில் மீது விரைவில் நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது, இது ஒரு புறம் என்றால் செந்திலுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது இல்லை என ஏற்கனவே திமுக தலைமை முடிவு செய்து இருக்கிறதாம்.