24 special

கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள மணிப்பூரில் பாஜக வென்றது எப்படி? அர்ஜுன் சம்பத் தெரிவித்த முக்கிய கருத்து!

Arjun Sampath
Arjun Sampath

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பாஜக மணிப்பூர் மாநிலத்தில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-


அர்ஜுன் சம்பத் அறிக்கை! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். மிகுதியும் கிறிஸ்துவர்கள் வாழும் மாநிலம் இது.  இங்கு 42 சதவீதம் கிறிஸ்துவர்களும்  8 சதவீதம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். அதுபோல  இந்துக்கள் 42 சதவீதம் வாழ்கிறார்கள்.

இந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மணிப்பூரில் ஒரு அதிசயம் நடந்தது. ஜனவரி 6ஆம் தேதி முதன் முதலாக ஒரு பயணிகள் ரயில் மணிப்பூருக்கு  வந்தது. அசாமில் சில்ச்சாரில் இருந்து புறப்பட்டு மணிப்பூரில் வங்கைச்சங்போ என்ற ஊரில்  அந்த ரயில் வந்து நின்றது.

மணிப்பூரில் வரலாற்றிலேயே முதன் முதலாக  ஒரு ரயில் அங்கு வந்து நிற்பது இதுதான்  முதல் முறை. மக்கள் அனைவரும் மூக்கில்  விரல் வைத்தனர்.

அடுத்து, கொஞ்ச நாள் கழித்து, அதே ஜனவரி  மாதம் 2ஆம் தேதி, மணிப்பூரின் ரானி கைடிநூலு என்ற ஊருக்கு ஒரு சரக்கு ரயில் வந்து சேர்ந்தது.

இந்தியாவின் வரலாற்றிலேயே முதன் முதலாக  மணிப்பூர் மாநிலமானது இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம் பெற்றது. இது ஒட்டு மொத்த  மணிப்பூர் மக்களுக்கும் மனநிறைவைத் தந்தது.

தேவாலயங்களில் கர்த்தருக்கு ஆராதனை நடந்தது. கோவில்களில் அர்ச்சனை நடந்தது. மசூதிகளில்  தொழுகை நடந்தது. சட்டமன்றத் தேர்தல் மணிப்பூரில் நடந்தபோது  மணிப்பூர் மக்கள் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும்  இந்துக்களும் சேர்ந்து பாஜக கட்சிக்கு வாக்களித்து  அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.

காங்கிரஸ் ஏன் அங்கு தோற்றது? சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்தியாவை ஆண்ட கட்சி  காங்கிரஸ். ஆனால் அக்கட்சியால் மணிப்பூருக்கு ரயிலைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் பாஜக கொண்டு வந்தது. எனவே மணிப்பூர்  மக்கள் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அளித்தனர்.

இல்லையேல் சிறுபான்மை மதம் எனப்படும் கிறிஸ்துவ. மக்கள் நிரம்பிய ஒரு மாநிலத்தில் இந்துத்துவக் கட்சியான பாஜக ஆட்சிக்கு வர முடியுமா? சதா சர்வ காலமும் போலியான பொய்யான  மதச்சார்பின்மையைப் பேசிக்கொண்டு, அடையாள அரசியலைக் கட்டி அழுது கொண்டு, இத்தனை  ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் ஒரு ரயில் கூட  அந்த மாநிலத்திற்கு விடாமல், வளர்ச்சிப் பணிகளில்  கோட்டை விட்ட காங்கிரசுக்கு மணிப்பூர் மக்கள் தேர்தலில் மரண அடி கொடுத்தனர்.

மணிப்பூர் என்றவுடனே காங்கிரஸ் அரசுகள்  அம்மக்களை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தின என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கட்டத்தில் மணிப்பூரின் பெண்கள்  நிர்வாணமாக நின்று கொண்டு போராட்டம்  நடத்தினர். உங்களுக்கு இரோம் ஷர்மிளா என்ற பெண்ணை நினைவு இருக்கிறதா? பல ஆண்டுகளாக  உண்ணாநோன்பு இருந்த பெண் அவர்.

காங்கிரஸ் ஆட்சி என்றாலே ராணுவத்தின் கொடூர ஆட்சிதான்.  எனவேதான் மக்கள் காங்கிரசுக்கு மணிப்பூரில் கொள்ளி வைத்துள்ளனர்.

இன்று பாஜக மணிப்பூரில் வளர்ச்சி வளர்ச்சி என்று  (விகாஸ் விகாஸ் என்று) வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மணிப்பூரில் முதன்  முதலாக ரயிலைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. பாஜக கொண்டு வந்த ரயில் அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி உள்ளது.

கம்யூனிஸ்டுகளும் பிரிவினைவாத நக்சல்கள் கிருத்துவ மத அடிப்படைவாதிகளும் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தை மணிப்பூர் மாநிலத்தில் செய்துவந்தார்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் போலீசாருக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்களை தூண்டி விட்டார்கள்.

இந்திய ராணுவம் குறித்து ராணுவம் எங்களை கற்பழித்தது என்று மணிப்பூர் மாநில பெண்களை வைத்து பேரணி நடத்தினார்கள்.  இந்தியாவின் மீது நேசம் கொண்ட மணிப்பூர் மக்கள் கம்யூனிஸ்டுகளின், மணிப்பூர் பிரிவினைவாதிகளின், இந்த செயல்களை வெறுத்தனர். 

கம்யூனிஸ்டுகளால் 18 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார் என்று ஒரு பெண்மணி நிறுத்தப்பட்டார். கடந்த கால தேர்தல்களில் அந்தப் பெண்மணி தோற்கடிக்கப்பட்டார்.  அவர் கொடைக்கானலில் இருந்து இப்பொழுது வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜியும் கம்யூனிஸ்டுகளும் அந்தப்பெண்ணை நாடாளுமன்ற உறுப்பினராக நாங்கள் உருவாக்குவோம் என்று அர்பன் நக்சல்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். 

தேசபக்தர்கள் ஆகிய மணிப்பூர் மக்கள் இன்றைக்கு காங்கிரசைத் தோற்கடித்து இருக்கிறார்கள். இனிமேலாவது இந்தியாவிற்கு எதிராகவும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் தூண்டிவிடுகின்றனர். இத்தகைய செயல்களுக்கு பலியாகாமல் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் எனவும் அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.