கடந்த சில மாதமாக விஜய் அரசியல் வருவது தொடர்பான செய்திகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தளபதி விஜய். இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்தது தனது மக்கள் மன்ற ரசிகர்களை மகிழ்ச்சியில் தள்ளினார். இதுவரை அரசியல் முன்னெடுப்புகளை நோக்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த விஜய் இன்று கட்சியின் பெயரை அறிவித்ததுடன் இனிமேல் முழு அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
தளபதி விஜய் என சினிமாவில் அழைக்கப்பட்டவர். தற்போது தலைவர் விஜய் என அழைக்க தொடங்கவுள்ளனர். இன்று விஜய் தனது கட்சி பெயரை அறிவித்ததும், கூடிய விரைவில் கோட்பாடு, கொள்கை, கட்சி சின்னம் ஆகியவற்றை அறிவிப்பதாக தெரிவித்த. மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பது இல்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். சினிமாவில் இருந்து ஓரம் கட்டும் விஜய் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள படங்களில் மட்டும் நடிக்க உள்ளதாகவும் அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பயணத்தை பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
தற்போது விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தினை விரைந்து முடிக்க இயக்குனரிடம் அறிவித்துள்ளார். வரும் நாட்களில் மாநாடு, மக்களை சந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபடுத்திக்கொள்வதாக கூறப்படுகிறது. சென்னை அடுத்த பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீடு இனி கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்படும் என தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியது தொடர்பாக மாவட்டம் தோறும் அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் விஜய் குறித்து அவருடைய பதிவை வெளியிட்டிருக்கிறார். "ரஜினியை போல் 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என சொல்லி ஏமாற்றவும் இல்லை. கமலை போல் பார்ட் டைம் அரசியலையும் செய்வதாக இல்லை. அந்த வகையில் அவர்களை விட விஜய் எவ்வளவோ மேல். யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம். இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும். என பதிவிட்டார். இதற்கு ஒவ்வொருவரும் ஒரு சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது ஏற்பட்ட எதிர்ப்புகளை விட விஜய் அதிகளவிலான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், திராவிட கட்சிகளை ஒழிப்பாரா என்பதை பொறுத்து தான் பார்க்கவேண்டும். விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இணையத்தில் வாழ்த்து தெரிவித்தார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் என்பது பெரிய கடல் அதில் யார் வேண்டுமானாலும் குதிக்கலாம் அதில் யார் கரை ஒதுங்குகிறார் என்று தான் பார்க வேண்டும் என விமர்சனம் செய்திருந்தார். சீமான் கட்சி தொடங்குவது சுலபம் இதில் தொடருவது தான் கஷ்ட்டம் என கூறினார். விஜய் யாருடன் 2026ல் கூட்டணி வைக்கப்போகிறார் என்பதை 2024 தேர்தல் முடிந்தவுடன் ஒவ்வொன்றாக தெரியவரும் என கூறப்படுகிறது.