2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களில் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது ஆனால் எந்த ஒரு நற்பெயருக்காக திமுக ஈடுபட்டாலும் அதற்கு எதிர்வினையே திமுகவிற்கு வருகிறது. அதிலும் குறிப்பாக திமுகவின் மூத்த அமைச்சர்களே தன் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி தருவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதாவது திமுக எங்களுக்கு இலவச பேருந்து வசதிகளை அமைத்துக் கொடுத்ததில் நாட்டிற்கே ஒரு முன்னோடியான திட்டத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளதாக திமுக பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இலவச பேருந்து செல்பவர்களை ஓசி பஸ்! ஓசி டிக்கெட் தான என பலவாறு திமுக மூத்த அமைச்சர்கள் பேசுயது சமூக வலைதளத்தில் வைரலானது மக்கள் மத்தியில் இது கடும் கண்டனங்களை பெற்றது. இப்படி பல சர்ச்சைகளை மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் அதில் மிக முக்கியமாக அமைச்சர் கே என் நேருவின் நடவடிக்கையானது பெருமளவில் வைரலானது .
அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக திமுகவின் தொண்டர்கள் முயற்சித்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் அனைவரையும் தள்ளிவிட்டு உதயநிதியை காப்பாற்றுவதாக நினைத்து அவர் செய்த வேலை தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்பதியை ஏற்படுத்தியது என பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் திமுக, தன் கட்சிக்குள்ளே ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டியதையே செய்யவில்லை இதில் எங்கு நமக்கு வேண்டியதை செய்யப் போகிறார்கள் என்ற பேசு பொருளுக்கு ஆளானது. இப்படி இருக்கும் நிலையில் அமைச்சர் கே என் நேரு தான் அரசியலில் வந்து செய்த பிரச்சினைகள் போதாது என்று தன் மகனையும் அரசியல் ஈடுபட வைத்து திமுகவிற்கு மற்றுமொரு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளார். தன் மகனே எப்படியாவது அரசியல் நுழைய வைக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளில் வெற்றி அடைந்து அமைச்சர் கே என் நேரு மகனான அருண் நேரு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே என் நேருவின் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் கே என் நேரு மகன் முதலில் திருச்சியில் இருந்து மருதாண்டாகுறிச்சி செல்லும் புதிய அரசு பேருந்து சேவையை துவக்கி வைத்துவிட்டு பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் பணியை தொடங்கினார். அப்பொழுது பகுதியைச் சேர்ந்த பல திமுக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை மொத்தமாக சேகரித்து அருண் நேருவிடம் கொடுப்பதற்கு நிகழ்ச்சி நடுவே குறுக்கிட்டு தங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய்களை சரி செய்யாமல் கொசு மற்றும் சாக்கடை பிரச்சனையால் நாங்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறோம் என குற்றம் சாடினர் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியை பாதியிலே நிறுத்திவிட்டு அந்த நபரை சமாதானம் செய்ய மற்றும் என்ன பிரச்சனை என்று கேட்பதற்காக தனியாக அழைத்துச் சென்று அருண் நேரு பேசிக் கொண்டிருப்பதை பத்திரிக்கையாளர்கள் வீடியோ எடுத்ததற்கும் பத்திரிகையாளர்களையும் திமுக தொண்டர்கள் கடுமையாக திட்டி உள்ளனர், பேட்டி கொடுத்த நபரையும் திமுக நிர்வாகிகள் மிரட்டும் வகையில் பேசியது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிரிப்புடன் அரசியல் சார்ந்த தனது முதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கே என் நேரு மகன் அருண் நேரு வருத்தத்துடன் திரும்பி சென்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தால் திமுகவிற்கு அப்பகுதி முழுவதும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.