அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அதற்க்கான பணிகளை அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக தேசிய கட்சியில் இருந்து விலகியதை அடுத்து இரு கட்சிகளும் தனித்து தேர்தலை காணுவதாக தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் எந்த கட்சி யாருடன் கூடி கூட்டணி தொடரப்போவது என்ற குழப்பம் நிலவி வந்தது.இந்நிலையில் பாமக அதிமுகவுடன் கூட்டணி தொடர பேச்சு வார்த்தை நடத்தியபோது எடப்பாடி பழனிச்சாமி பாமகவை சேர்த்தால் நிச்சயம் 10.5 சதவீத உல் இடஒதுக்கீடு விவகாரம் கேட்கும், மேலும் பிற சமூகத்தின் ஓட்டுக்களை வரவிடாமல் தடுத்து விடும் என்று அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர்.
அதனால் பாமகவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று கதவை மூடிவிட்டது. சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வன்னியர் சமூகத்தின் உள் இட ஒதுக்கீடு குறித்து பேசினார். ஆனால் அப்போது கூட்டணியில் சேர வேண்டி வாய்ப்பு கேட்கப்பட்டதாக தகவல் கசிந்தன. தற்போது திமுக கூட்டணியில் ஹவுஸ்புல் ஆனா நிலையில் திமுக அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில் இருந்து யாராவது வெளியேறினால் நிச்சயம் வாய்ப்பு தருவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியில் இருந்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அன்புமணி, திமுக நிர்வாகிகளை சந்தித்த போது, ஐந்து தொகுதிகளை அன்புமணி கேட்டதாகவும், மூன்று தொகுதிகளை மட்டுமே திமுக தருவதாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும்.
மேலும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் என அறிவிக்க வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்தது, இதனை யோசித்து முடிவு எடுப்பதாக அன்புமணி தெரிவித்ததால் அங்கும் இடம்மில்லாமல் சிக்கி வருகிறார். அதே நேரத்தில் பாஜக வசம் செல்ல பாமக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்படி சென்றால் மூன்றில் ஒரு பங்காக 13 தொகுதி தரப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், கடலூர், சிதம்பரம் மற்றும் தருமபுரி தொகுதியில் நிச்சயம் வெற்றி தேடி தரவேண்டும். வெற்றியை தேடி தந்தால் மட்டும் மத்திய அமைச்சர் பதவி பாமகவுக்கு தர முடியும் என்ற நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனை பாமக ஏற்று கொள்ளவில்லை வெற்றி, தோல்வி நிபந்தனை இல்லாமல் மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென்று பாமக தெரிவித்துள்ளதாம்.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது, அப்போது தருமபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் தரவில்லை.இதற்கிடையில் அன்புமணி உறுதியாக மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே பாஜகவுடன், கூட்டணி குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார் அன்புமணி. வழக்கமாக பாஜக கூட்டணியில் சேருவது இந்த லோக்சபா தேர்தலிலும் தொடருமா என்று டிசம்பரில் பாமகவின் பொது குழு கூட்டம் கூட்டி அதன் பின்னே முடிவு எடுக்கப்படும் என்று பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வரும் மாதத்தில் நிச்சயம் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் என கருத்துக்களை கூறி வருகின்றனர் அரசியல் விமர்சகர்.