நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் திரைக்கு வர உள்ளதையொட்டி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் ஆலோசனைக் கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜாபர் பர்வேஸ் தலைமையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே ரெங்கம்மா சத்திரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்தை வரவேற்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர் பின்னர் அங்கு வந்த புஸ்ஷி ஆனந்தை இருசக்கர வாகன பேரணியுடனும் அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அப்பொழுது காவல்துறையினருக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று புஸ்ஷி ஆனந்தை பேரணி அல்லாமல் வரவேற்று நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக முடக்க படுவதாகவும், திமுக அதிமுகவினர் சுதந்திரமாக போராட்டம் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் என எங்கும் செல்லலாம் ஆனால் எங்கள் ரசிகர் மன்ற தலைவரை அழைத்து வர தங்களுக்கு உரிமை இல்லையா? ஏன் எங்கள் தளபதிக்கு மட்டும் திமுக அதிமுக என எந்த ஆட்சி வந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்.