24 special

குடிமகன்கள் கேட்கும் கேள்விக்கு திமுக அரசு பதில் சொல்லுமா...?

mkstalin
mkstalin

குடிமகன்கள் டாஸ்மாக் வாசலில் நின்று எழுப்பிய கேள்வி தற்போது இணையத்தில் வைரலாக இதுதான் திராவிட மாடலின் சாதனையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


கடலூர் மாவட்டம்  உத்தமசோழன் கிராமத்தில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது இந்த கடையில் தினந்தோறும் கூலி வேலை செய்யும் மது பிரியர்கள் அதிக அளவில் மது அருந்துவது வழக்கம்.

இந்த நிலையில் குவாட்டர் 130க்கு விற்கப்படும் குவாட்டர் தற்பொழுது 135 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது நாங்க எல்லாம் கூலி வேலை செய்துதான் வருகிறோம் தற்பொழுது அந்த குவாட்டர் கிடைக்கப்படுவதே இல்லை என மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் அந்த 135 ரூபாய் வழங்கப்படும் குவாட்டர் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்ட மது பிரியர்கள் சரக்கு இல்லை என்றால் கடையை இழுத்து மூட வேண்டும் எனவும் நாங்கள் தற்பொழுது நாற்று பறித்தால் ஒரு நாள் சம்பளம் 500 ரூபாய் வாங்கிக்கொண்டு 250 ரூபாய் கொடுத்து நாங்கள் குவாட்டரையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு பால் வாங்குவது எப்படி காய்கறி வாங்குவது எப்படி என டாஸ்மாக் கடை ஊழியரிடம் அது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அது மட்டும் அல்லாமல் கடலூர் மாவட்டத்தில் இந்த கடை தான் அதிக அளவு வியாபாரம் பெறுகிறது இந்த கடையில் ஏன் 135 குவாட்டர்கள் இல்லை என மது பிரியர்கள் ஊழியரிடம் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தால் படி படியாக மதுவை ஒழிப்பார்கள் என கடந்த முறை திமுகவிற்கு பல சமூக ஆர்வலர்கள் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குரல் கொடுத்தனர் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து முதலில் டாஸ்மாக் விலையை ஏற்றியது தொடங்கி அதிகமான விலை கொண்ட மது பானங்களை அறிமுக படுத்தியதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா என குடிமகன்களே புலம்பி வருகின்றனர்.