24 special

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஜெகத்ரட்சகன்... அடுத்தடுத்த சம்பவம்...?

jagatrashagan
jagatrashagan

தமிழகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில்  ஜெகத் ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன இந்த நிலையில் 5 வது நாளான இன்று ஜெகத் ரட்சகன் மகள் வீட்டில் கிடைத்த ஆதாரங்களை பார்த்து ஒட்டு மொத்த வருமான வருத்துறையும் மிரண்டு போய் இருக்கிறதாம்.


உடனடியாக டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமைக்கு தகவல் கொடுக்க அங்கு இருந்து வருமான வரிதுறையையை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் உடனடியாக விமானம் மூலம் சென்னை விரைந்து இருக்கிறார்கள்.

இதுவரை இது போன்ற வருமான வரிதுறையை சேர்ந்த புலனாய்வு அமைப்புகள் இரண்டு நாடுகளுக்கு இடையே மிக பெரிய அளவில் வியாபாரம் செய்யும் பெரும் நிறுவனங்களில் மட்டுமே இது போன்ற ஆவணங்களை மதிப்பீடு செய்ய ஒரே நேரத்தில் குவிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெகத்ரட்சகன் தனது பல்வேறு நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு வியாபாரங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கருப்பு பணத்தை மாற்ற பார்க்கிறார் என்ற புகாரின் அடிப்படையிலும் இந்த சோதனைகள் 5 வது நாளாக நடப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால் செந்தில் பாலாஜி வழக்கை போன்றே ஜெகத்ரட்சகன் வழக்கும் அதே திசையில் செல்வதாகவும், வருமான வரித்துறையை தொடர்ந்து தற்போது அமலாக்க துறையும் சோதனையில் ஈடுபட்டு இருப்பதால் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜெகத் ரட்சகன் மகள் மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்ய படலாம் எனவும் விரைவில் அந்த சம்பவங்கள் அரங்கேறும் எனவும்.

இதுவரை சோதனையில் சிக்கியது என்ன? எத்தனை கோடி வரி ஏய்ப்பு நடந்தது எனவும் கருப்பு பணம் எத்தனை ஆயிரம் கோடி என முழு தகவலையும் வெளியிட்டு அதன் பிறகே கைது நடவடிக்கையில் ஈடுபட புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்து இருக்கிறதாம்.

மொத்தத்தில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து தற்போது ஜெகத் ரட்சகன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்படலாம் என்ற தகவலால் ஒட்டுமொத்த திமுகவின் முன்னணி வட்டாரங்கள் அடுத்தது யார் என்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறதாம்.