24 special

மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடும் பெண்களே உஷார்!!!

MATRIMONY ISSUE
MATRIMONY ISSUE

முதலில் இருந்த பெண்களுக்கும் இக்காலத்தில் உள்ள பெண்களுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. தற்போது உள்ள பெண்கள் அனைத்து துறையிலும் மென்மேலும் அவர்களின் திறமையால் வளர்ந்து கொண்டே செல்கின்றனர். பெண்கள் இல்லாத துறைகளே தற்போது இல்லை என்று கூறும் அளவிற்கு அவர்களின் வளர்ச்சி போய்க் கொண்டுள்ளது. பஸ்ஸில் கண்டக்டர் முதல் பிளைட் ஒட்டும் பைலட் வரை அனைத்து துறைகளிலும் தற்போது பெண்களை பார்க்க முடிகிறது. இப்படி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த பெண்களின் மனநிலை இன்னும் ஒரு விஷயத்தில் மட்டும் அப்போது இருந்ததைப் போலவே இன்னும் இருக்கிறது என்றே கூறலாம். அது என்ன விஷயம் என்றால்..??அந்த காலத்தில் இருந்த பெண்களும் யாராவது ஆண்கள் அன்பாக பேசி பழகிய உடன் அவர்களின் பணம் முதல் உடல் வரை அனைத்தையும் இழந்து நிற்பதை நாம் நிறையவே பார்த்திருப்போம்.


                                                                                                                         

அதுபோலவே இன்று உள்ள பெண்களும் எல்லா துறையிலும் தெளிவான அறிவுடன் செயல்பட்டு வளர்ச்சி அடைந்தாலும் கூட சில ஏமாற்றும் ஆண்களை நம்பி தங்களின் பணம் முதல் கொண்டு அனைத்தையும் இழந்து விட்டு அதன் பின் புகார் முதலியவற்றை கொடுத்து அவதிப்பட்டு வருகின்றனர். சில ஆண்கள் பெண்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தாலும் கூட சில ஆண்கள் இப்படி பெண்களின் நம்பிக்கைக்கு எதிராகவும் அவர்களை ஏமாற்றும் நோக்குடனும்  இருந்து வருகின்றனர். இது போல தான் தற்போது சென்னையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது!!மேட்ரிமோனியில் உள்ள பெண்களை பேசி அவர்களிடம் பணம் முதல் கொண்டு வாங்கிவிட்டு நெதர்லாந்துக்கு எஸ்கேப் ஆகி உள்ளார் மாரிமுத்து என்னும் வாலிபர். இதுகுறித்து ஏமாந்த பெண் சென்னை டிஜிபி ஆபீஸில் புகார் கொடுக்க வந்த போது கொடுத்த பேட்டி ஒன்றில் நடந்ததை கூறியுள்ளார். அது என்னவென்றால்??? 

                                                                                                                        

 தமிழ் மேட்ரிமோனி என்னும் வெப்சைட்டை மூலம் அறிமுகமானவர்தான் இந்த மாரிமுத்து. அதை அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி இருந்தார் என்றும், அவருக்கு கொஞ்சம் கடன்கள் இருப்பதாக கூறியதால் தன்னிடம் இருந்த பணம் முதல் கொண்டு நகை அனைத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும் அந்தப் பெண் கூறுகிறார். அவரின் அம்மா அப்பா முதல் கொண்டு அனைவரும் திருமணத்திற்கு சம்மதித்த பிறகு தான் அவர் என்னிடம் பேசவே ஆரம்பித்தார். உங்கள் நெதர்லாந்தில் இருந்து தன்னை பார்ப்பதற்காகவே கடந்த ஜூன் மாதம் வந்திருந்தார். முதலில் நாங்கள் இருவரும் சந்தித்த போதே அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனால்தான் அவருக்கு இருந்த கடன்களை என்னிடம் கூறிய போது நானும் அவருக்கு உதவி செய்தேன்.

                                                                                                            


ஆனால் அவர் தற்போது என்னை உடல் ரீதியாகவும் ஏமாற்று விட்டு  நெதர்லாந்து சென்று விட்டார். அதன் பிறகு அவருடன் பேச முயற்சித்த போது அவர் தன்னிடம் பேச மறுத்துவிட்டார். மேலும் அவரைக்கு நிறைய தெரியாத நண்பர்களில் இருந்து போன் வந்து கொண்டே இருக்கும். இதை பின்தொடர்ந்து பார்க்கையில் தான் தெரிய வந்தது இவர் தன்னை போலவே நிறைய பெண்களை ஏமாற்றியுள்ளார் என்று. இது குறித்து என்னுடைய நண்பர்களும் அவரிடம் பேச போனபோது அவர் அவர்களிடமும் தப்பாக பேசி உள்ளார். மேலும் அவரின் அம்மாவும் அவரைப் பற்றி தவறான கருத்துக்களை தற்போது தெரிவித்துள்ளார். இது போன்ற தவறு மேலும் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என்பதற்காகவே தற்போது இவர் மீது புகார் அளிக்க வந்துள்ளேன் என்று பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்!!