தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் ஜோதிமணி கை சின்னத்தில் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரம் காட்டும் ஜோதிமணி கண்ணீர் விட்டு அழுதபடி மக்களிடம் பிரச்சாரம் செய்து வரும் காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்காக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக போய் கொண்டு இருக்கும் வேளையில் கரூர் தொகுதி மக்கள் கவனம் செலுத்தும் பகுதியில் ஒன்றாக கரூர் தொகுதி மாறியுள்ளது. கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஜோதிமணி காங்கிரஸ் தலைமையிடம் பேசு கேட்டு வாங்கியுள்ளார். ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளோ ஜோதிமணிக்கு எதிராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தொகுதியில் பாஜக சார்பாக கரூர் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் வழக்கத்துக்கு மாறாக இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. எப்போதும் செந்தில்பாலாஜி ஆதரவுடன் நடைபெறும் தேர்தல்களில் இந்த முறை முதன் முதலாக செந்தில்பாலாஜி இல்லாமல் அந்த தொகுதி நடைபெறவுள்ளது.
ஆனாலும், ஜோதிமணி தேர்தல் பரப்புரையின் போது செந்தில் பாலாஜி ஆதரவுடன் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என கூறிவந்தார். நடத்தப்பட்ட பொது கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது கூட ஸ்டாலின் பேசுகையில் செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார். இப்படிபட்ட சூழ்நிலையில், ஜோதிமணி பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
ஜோதிமணிக்கு கிடைத்த ரகசிய சர்வேபடி இந்த தேர்தலில் 50000 ஒட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவலாம் எனவும் பாஜக வேட்பாளர் வெற்றி பெறலாம் எனவும் கூறப்படுவதால், இது கரூர் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. அதன் காரணத்தாலே ஜோதிமணி போகும் இடமெல்லாம் கண்ணீர் சிந்தவும் ஜோதிமணி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஜோதிமணி தோல்வி அடையேவே செந்தில் பாலாஜி ஆட்கள் வேலை செய்து வருவதாகவும், செந்தில் பாலாஜி கூறிய நபரை கரூரில் நிறுத்த திமுக தலைமைக்கு உத்தரவிட்டதாகவும் ஆனால், ஜோதிமணி தனக்கு சீட் வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு வாங்கியுள்ளார்.
இதனால் செந்தில் பாலாஜியே காங்கிரஸுக்கு ஆதாரவு கொடுக்க வேண்டாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது அம்மா பாசம் என்றும் கண்ணீர் விட்டு வருகிறாராம். மேலும், செந்தில்பாலாஜி பரிந்துரையில் தான் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் களமிறங்குகிறார் என சில தகவல் வெளியாகின. இதனால் கரூரில் பாஜக கால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.