தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுக-பாஜக இடையில் உரசல், அதிமுக பாஜக கூட்டணி உடைந்து விடும் என பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது குறித்து இரண்டு கட்சி தலைமையிடம் இருந்து வராத நிலையில் இரு தரப்பிலிருந்து வார்த்தை போர் கடுமையாக இருந்து வந்தது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை குறிவைத்து அதிமுகவில் இருக்கக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்களான சி.வி சண்முகம், செல்லூர் ராஜு போன்றோர் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து வந்தனர். அதற்கு பாஜக தரப்பிலிருந்து பாஜக நிர்வாகிகள் அவர்களை நோக்கி சில வார்த்தைகளை பிரயோகித்து வந்தனர். இப்படி இரு தரப்பிற்கு இடையில் பனிப்போர் இருந்து வந்த சமயம் அதிமுக பாஜக கூட்டணி உடைந்து விட்டதே என ஊடகங்களும் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து சர்ச்சை வெடித்த நிலையில் இரு கட்சி தலைமையும் சேர்ந்து இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 'அதிமுக பாஜக கூட்டணி உடையவில்லை' என கூறினார். அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் 'இரு தரப்பில் இருக்கக்கூடிய கூட்டணி முறியவில்லை, யாரேனும் ஏதாவது வார்த்தைகள் சொல்லி இருந்தால் அது அவர்கள் தனிப்பட்ட கருத்து. ஆனால் அதிமுக பாஜக இன்னும் கூட்டணியில் தான் இருக்கிறது' என கூறி வந்தார். இதன் பின்னணியை விசாரித்த பொழுது தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்து சில பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும் அதன் காரணமாகவே இந்த நிலை எனவும் தகவல்கள் கிடைத்தன. இது மட்டுமல்லாமல் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து பாஜக டெல்லியில் இருந்து காய்களை நகர்த்தி வருகிறது எனவும் அதன் வெளிப்பாடாகவே அண்ணாமலை இப்படி பேசுகிறார் எனவும் வேறு சில தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவை எதிர்த்து சில கருத்துக்களை கூறிய அதிமுக தற்பொழுது அதன் தவறை உணர்ந்து டெல்லிக்கு வெள்ளை கொடியுடன் சென்றதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அதிமுகவின் கேபி முனுசாமி, சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்கள்.உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த ஐவர் குழு வரும் உரையாடினார்கள் என்பதும், சமாதான கொடியாக கூட்டணி எதுவும் முறியவில்லை நாங்கள் யாரேனும் ஏதேனும் பேசி இருந்தால் அது தமிழக அரசியலுக்காக தான் இருக்குமே தவிர கூட்டணிக் குறித்து இருக்காது என டெல்லியில் சரணடைந்து விட்டதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த முறை தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாகவும் வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.எப்படியும் அதிமுக பாஜக கூட்டணி உடைந்து விடும் இது நமக்கு லாபம் தான் என கூட்டணி அரசியல் கணக்கு போட்டு வந்த ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு இது தலையில் இடியை இறக்கியது போல் உள்ளது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக கூட்டணி உடைந்துவிடும் நாம் அதிமுகவுடன் இணைந்துவிடலாம் என கணக்குகளை போட்டு வந்த திருமாவளவனுக்கு வேறு இது ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியாக அமைந்துவிட்டது என வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.