பாஜக தலைவர் அண்ணாமலையை மையப்படுத்தி செய்திகள் வெளியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியான தகவல்கள் குறித்து எழுத்தாளர் சுந்தரராஜாசோழன் தனது கருத்தை தெரிவித்துள்ளார், அது பின்வருமாறு :-
ஜூ.வி அட்டைப் படத்திலேயே அண்ணாமலை படம்தான் இருந்தது.உள்ளே முதல் 3 பக்கம் தமிழக பாஜக உட்கட்சி அரசியல் பிறகு உள்ளே அண்ணாமலைக்கு சவால் விடும் திமுககாரர்கள் கர்ஜனை,அதன் பின்பு யாருக்கு விருந்து தருவீர்கள் என பிரபலங்களின் ஆசையை பிரதிபலிக்கும் பக்கங்கள்..அதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலை பெயரையும் சொல்லியிருந்தார்.
தமிழகத்தின் பிரபல அரசியல் பத்திரிக்கை 40% செய்தியை அண்ணாமலையை மையப்படுத்தி வெளியிட்டு,அதை விற்கும் நிலைக்கு நகர்ந்திருப்பதே தமிழக அரசியலின் போக்கு தெரிகிறது, உட்கட்சி பிரச்சனையை பேசும் ஜூ.வி,அண்ணாமலை மீது கட்சிக்காரர்கள் குறை சொல்வதாக பேசுகிறது..அது என்ன குறை?
அவர் கடுமையான போலீஸ் அதிகாரியாகவே இன்னும் இருக்கிறார்,வளைந்து கொடுக்க மாட்டேன் என்கிறார்,முன்னாள் ஊழல் பெருச்சாளிகளையும் பிறகட்சிகளிடம் ரகசிய டீல் உள்ளவர்களையும் புறக்கணிக்கிறார்,மிரட்டுகிறார், புதிய அணியை உருவாக்க நினைத்து சீனியர்களை ஓரங்கட்டுகிறார் என்றெல்லாம் முகம் தெரியாத பாஜககாரர் புலம்பியதாக ஜூ.வி எழுதிக் கொண்டே செல்கிறது.
ஆனால்,இதில் எங்கே தவறுள்ளது என்றுதான் படிக்கிற எல்லோருக்குமே நினைக்கத் தோன்றுகிறது..கட்சியை கீழ்மட்டத்தில் இருந்து அதை மேலே கொண்டு போக ஒரு நேர்மையான அரசியல்வாதி என்னென்ன செய்ய வேண்டுமோ? அவையனைத்தையும் தனது பாணியில் செய்கிறார் அண்ணாமலை.அதை சமரசமில்லாமல் செய்து முடிக்கவே இவரை அனுப்பியுள்ளார்கள்.
ஆளுநர்களாகவும்,தேசிய அரசியலில் தன் பங்கை நாடு முழுக்க தரச்சென்ற தமிழக தலைமைகள் எல்லாம் அண்ணாமலைக்கு வழிவிட்டு நிற்பதே சரி..யாருடைய ஈகோவை விடவும் கட்சி வளர்ச்சி மிக முக்கியம், அதை வழி நடத்தி கொண்டு போக அமைப்பு பலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போல மக்கள் நம்புகிற தலைவனும் முக்கியம்.அப்படி மக்களிடம் உருவாகும் நம்பிக்கைதான் அமைப்பு பலத்தை கட்டியெழுப்பவே உதவும்.
கோபிநாத் முண்டே - எடியூரப்பா போன்ற தலைவர்களுக்கு இருந்த அதே பொறுப்பும்,சுமையும் அதீத உழைப்பும் திரு.அண்ணாமலையிடம் உள்ளது, அந்த மாநிலங்களில் பாஜக அடைந்த உயரத்தை,தமிழகத்திலும் அண்ணாமலை தலைமையில் பெறும்..அதற்கு தடையாக இருப்பது என்றுமே எதிரிகள் இல்லை பார்ப்போம். என குறிப்பிட்டுள்ளார்.