Cinema

தமிழக திரைத்துறை அதிரடி மாற்றம்...டெல்லியில் முகாமிட போவதால் பரபரப்பு..!

Annamalai
Annamalai

TNNEWS24-ன் EXCLUSIVE ரிப்போர்ட் தகவல்களை மாதம் 5 முறை நீங்கள் இலவசமாக படித்து கொள்ளலாம். தமிழக திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என 50 பேர் டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் இவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை சந்தித்து தமிழகத்தில் திரை துறையினர் சந்திக்கும் பாதிப்புகளை எடுத்து கூற இருப்பதாக கூறப்படுகிறது.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு சிக்கல்களை திரை துறையினர் சந்தித்து வருகின்றனராம் குறிப்பாக தயாரிப்பாளர்கள் தரப்பு கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனராம். நல்ல திரைப்படங்களை தாங்களே நேரடியாக வியாபாரம் செய்ய முடியவில்லையாம்.

மூன்றாம் சக்தி ஒன்று இரண்டு நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிற்கு உங்களது படங்களை கொடுத்து விடுங்கள், இல்லை என்றால் உங்கள் படங்களுக்கு முறையான தியேட்டர் கிடைக்காது பண்டிகை நாட்களில் படத்தை விநியோகம் செய்ய முடியாது என பல்வேறு விதத்தில் அழுத்தம் கொடுக்கிறார்களாம்.

மேலும் சாட்டிலைட் உரிமையை தாங்கள் சொல்லும் நிறுவனத்திற்கு நாங்கள் சொல்லும் விலைக்கு தான் விற்கவேண்டும் என பல்வேறு விதங்களில் அழுத்தம் கொடுக்கிறார்களாம்.இதனால் பல தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருப்பதாகவும் சிலர் மிரட்டப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாம்.

சமீபத்தில் இது குறித்து திரை துறையை சேர்ந்த ஒருவர் மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் தகவலை தெரிவித்துள்ளார், மேலும் பிரபலமான நடிகர் ஒருவரும் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க நேரம் கேட்டுள்ளாராம் அண்ணாமலை தமிழகம் திரும்பியவுடன் இந்த சந்திப்பு அரங்கேறும் என்றும் அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் சிலரை அழைத்து கொண்டு டெல்லி. சென்று உள்துறை அமைச்சரை சந்திக்க தமிழக பாஜக தயாராகி வருகிறதாம்.

டெல்லியில் ஒரு வேலை சந்திப்பு நடக்க தாமதமானால், உள்துறை அமைச்சர் அமிட்ஷா தமிழகம் வரும் போது நிச்சயம் இந்த சந்திப்பு நடக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.