பதிவு - ஸ்டான்லிராஜன் -
ஆசியாவில் குறிப்பாக தெற்காசியாவில் மிகபெரிய பொருளாதார முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. பர்மா, வங்கதேசம், தாய்லாந்து, இந்தோ சீன நாடுகளெல்லாம் பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றன, இலங்கையும் பாகிஸ்தானும் மீளமுடியா நெருக்கடிக்கு தள்ளபட்டு மக்கள் புரட்சிக்கு தயாராக இருக்கின்றன.
இன்று அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பலமுள்ள நாடுகள் இரண்டுதான் , ஒன்று சீனா இன்னொன்று இந்தியா, சீனாவின் அடக்குமுறையான அரசின் தன்மையே வேறு, அங்கு தேர்தல் இல்லை கம்யூனிச அரசின் பேச்சை தவிர வேறு எதையும் சொல்லும் ஊடகம் இல்லை, டிவிட்டர் முகநூல் என எதுவுமில்லை பெரும் இரும்புதிரை நாடு அது.
அங்கு 1975 முதல் பொருளாதார பாய்ச்சல் அதிகம், அந்நிய செலாவணி கையிருப்பு அதிகம் அதை கொண்டு எப்படியோ சமாளிக்கின்றார்கள் என்றாலும் முந்தைய ஆண்டைவிட அவர்கள் பொருளாதாரம் சரிந்த்திருப்பது நிஜம், ஆனால் இந்தியா அப்படி அல்ல, அது ஜனநாயக நாடு இங்கு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஓயாத இரைச்சலும் சத்தமும் குழப்பமும் உண்டு.
அந்நிலையிலும் மிக வலுவான பொருளாதாரத்தை கொண்டு ஆசியாவின் வலுவான நாடு என அது இன்று தனித்து நிற்க இந்திய நிதியமைச்சர் மிகபெரும் காரணம், கொரோனாவில் இருந்து தேசத்தை மீட்க அவர் அறிவித்த 19 லட்சம் கோடி நிதியில்தான் இப்பொழுதும் மாநில அரசுக்கு வட்டியில்லா கடன் என அவர் அறிவித்ததில்தான் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
மிக சரியான நேரத்தில் சரியான இடத்தில் அமர்ந்து தேசத்தை காத்திருக்கின்றார் நிர்மலா சீத்தாராமன் இன்று உலக நாடுகள் ஜெர்மனியினை நிமிர வைத்த ஏஞ்சலோ மார்கலுக்கு நிகராக நிர்மலா சீதாராமனை கொண்டாடுகின்றன, அவரைத்தான் ஊறுகாய் மாமி, பாப்பாத்தி, லூஸ் ஜாக்கெட் என்றெல்லாம் திமுகவும் திராவிட தரப்புகளும் கரித்து கொட்டின.
இன்று அந்த பெண்மணியின் மிகசிறந்த பொருளாதார நடவடிக்கைதான் தேசத்தை தாங்கி நிற்கின்றது, தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் கிழித்துவிடுவோம் என்ற கும்பலெல்லாம் இப்பொழுது ஒருவேளை தமிழகம் தனிநாடாக இருந்தால் கூட இலங்கை போல் நாசமாகியிருப்போம் என உணர்ந்து கள்ளமவுனம் காக்கின்றன.
நிச்சயம் இலங்கை அளவு முக்கிய இடம் தமிழகத்துக்கு இல்லை, இலங்கையின் அமைவிடமும் வளமும் தமிழகத்தை விட அதிகம், ஆனால் அந்த இலங்கையே தடுமாறும்பொழுது தமிழகமெல்லாம் தனிநாடாய் இருந்திருந்தால் பெரும் சீரழிவினை சந்தித்திருக்கும், நாம் முன்பே "ஸ்ரீரங்கத்து தேவதை" என அந்த அம்மணியினை சொன்னபொழுது நம்மை கலாய்த்தவர்கள் கிண்டலடித்தவர்கள், இரண்டு ரூபாய்க்கு எழுதுகின்றான் என்றவர்களை இப்பொழுதெல்லாம் காணவே இல்லை.
அந்த நிர்மலாவினை இன்று அமைச்சராக கண்டவர்களுக்கு அப்படித்தான் தெரியும், ஆனால் சிவகாசி, தூத்துகுடி என பல இடங்களில் களபணி செய்து நாடு முழுக்க ஒரு பரதேசியாய் அலைந்து தேசத்தை முழுக்க படித்துத்தான் அவர் அந்த இடத்துக்கு வந்தார் என்பது பலருக்கு தெரியாது. அந்த "ஸ்ரீரங்கத்து தேவதை" இப்பொழுது தேசத்தை காத்துகொண்டிருக்கின்றது.
இந்த கட்டுரை/பதிவு தனி நபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ததை TNNEWS24 குழு இணையதளம் மூலம் பொது பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவுகிறது, இந்த கட்டுரை TNNEWS24 குழுவால் உருவாக்கப்பட்டதல்ல . உங்களது சிறப்பு கட்டுரைகள் /பதிவுகளை எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.. EMAIL - [email protected] *T@C APPLY