
முத்தலாக்கை தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு இஸ்லாமியர்களில் பெரும்பாலோனார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்தங்கிய இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடையேஆதரவை பெற்று வருகிறது
வஃக்பு சொத்துகள் என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் சந்தேகங்களும், கோபமும் எழுந்து வருகிறது. மத நலன் என்ற போர்வையில் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அரசியல் ஆதரவுடன் செயல்படும் சிலர் சட்டத்தை தங்களுக்கே உரியதாக மாற்றிக் கொண்டு, ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிலங்களை அபகரித்து வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன.
இதே போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பங்குளம், பெரியநாயகிசத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை, சித்தாநத்தம், கோமாகுடி, மணமேடு, பாகனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை. வக்பு வாரியத்தின் தடையின்மை சான்று பெறாமல், இங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அடமானம் வைக்கவோ பத்திரப்பதிவுத் துறை அனுமதிக்கக்கூடாது என குறிப்பிட்டது. திருச்செந்துறை சந்திரசேகரர் சுவாமிகள் கோயில் ஏறத்தாழ 1,300 ஆண்டுகள் பழமையானது.எங்கள் மூதாதையர் காலத்து பூர்வீக சொத்துகளை தான் பரம்பரையாக அனுபவித்து வந்ததை வக்பு பழைய சட்டத்தால் அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இது போல் இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாட தொடங்கியது. இதையெல்லம் மாற்றவே புதிய வக்பு சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு.
இதற்கிடையில் தான் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது வஃக்பு போர்டா அல்லது மாஃபியா போர்டா?” என்ற கடும் கேள்வியை எழுப்பி, இனி வஃக்பு என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இன்ச் நிலமும் ஒரு சதுர அடி கூட பாக்கி வைக்காமல் முழுமையாக மீட்கப்படும் என உறுதியான சபதம் எடுத்துள்ளார். சட்டத்தின் பெயரில் சட்டத்தை மீறும் எவருக்கும் தப்பிக்கும் வழி இருக்காது என்றும், அரசியல் செல்வாக்கோ அல்லது மத அடையாளமோ சட்டவிரோத செயல்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
மீட்கப்படும் நிலங்கள் எந்தவித தனியார் லாபத்துக்கும் அல்ல, முழுக்க முழுக்க சமூக நலனுக்காகவே பயன்படுத்தப்படும் என்றும், அந்த இடங்களில் ஏழைகளுக்கான வீடுகள் கட்டப்படும், அரசு பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெளிவுபடுத்தினார். இது வெறும் அரசியல் பேச்சல்ல, மாஃபியா ஆட்சியை ஒழித்தது போலவே வஃக்பு பெயரில் நடைபெறும் முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நிர்வாக நடவடிக்கையாகும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறிய இந்த கருத்துகள், நாட்டின் அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
