தமிழக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளிக்க நினைத்து செய்தியாளர்களை சந்தித்த சந்திப்பு தற்போது அவருக்கே வினையாக முடிந்துள்ளது, தமிழகத்தில் சொத்து வரி கணிசமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி என 150% வரை சொத்து வரி உயர்ந்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு மத்திய அரசின் உத்தரவு காரணமாகதான் விலையை ஏற்றினோம் என பேச்சுவாக்கில் குறிப்பிட்டார், இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சரின் தகவல் தவறு என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார் அதில்.
தமிழக அரசு திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்றால் தொழில்கள் நலிவுற்றும் வருமானம் குறைந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் குடியிருப்பு சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது.மக்களின் எதிர்ப்பை கண்டவுடன் அமைச்சர் நேரு இந்த தடாலடி சொத்து வரி உயர்வுக்கு நீண்ட விளக்கம் அளித்துஉள்ளார்.
அதில் உண்மைக்கு புறம்பாக 'மத்திய அரசு சொல்லிதான் நாங்கள் வரியை உயர்த்தினோம்' என்று பொய்யாக குறிப்பிடுகிறார்.
எந்த இடத்திலும் மத்திய அரசின் ஆணையில் சொத்து வரியை உயர்த்தச் சொல்லவே இல்லை.தாறுமாறாக சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய் புகார் தெரிவிக்கின்றனர் என அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சூழலில் கேஎன் நேரு உயர் மட்ட துறை சார்ந்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு மத்திய அரசு உத்தரவில் உண்மையில் விலையை உயர்த்தவேண்டும் என சொல்லவில்லையா? என கேட்க அவரும் நீண்ட தேடலுக்கு பின்னர் ஆம் என்று கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த கே.என்.நேரு ஏற்கனவே செந்தில் பாலாஜியை BGR விவகாரத்தில் அந்த அண்ணாமலை வம்பில் சிக்க வைத்தார், சேகர் பாபுவை கோவில் நகை உருக்குதல் விஷயத்தில் சிக்கவைத்தார். நாம் வேறு பேசி இருக்கிறோம் என்ன செய்ய காத்து இருக்காரோ என வெளிப்படையாக புலம்பி இருக்கிறார்.
இதை பார்த்த அருகில் இருந்த மூத்த உடன் பிறப்புகள் அவசரப்பட்டு வாயை விட்டுடீங்களே அண்ணே என பதில் உரை கொடுத்துள்ளனர்.