24 special

தமிழக மக்களே இதை பார்த்தாவது திருந்தினால் சரி..ஜூலியின் பல்டி !

modi and juli
modi and juli

காலம் அனைத்திற்கும் விடை கொடுக்கிறது ஆனால் நாம் தான் ஏற்று கொள்ள மறுக்கிறோம் ஜூலி என்ற பெண்மணி எப்படியெல்லாம் இருந்தார் அவர் எதன் மூலம் ஊடக புகழ் அடைந்தார் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதில் இருந்தே நம்மை ஊடகங்களும் சில சித்தாந்தவாதிகளும் வழிநடத்துகிறார்கள் என்பதை அறியலாம்.


ஜல்லிக்கட்டு தடை காங்கிரஸ் அரசாங்கதால் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது, இதற்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் கிராம மக்கள் முதலில் அடையாள போராட்டமாக கருப்பு கொடி வைத்து ஒன்று சேர்ந்து போராட்டம் தொடங்கினர்.

தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு குறைவாக இருந்தது, சமூக வலைத்தளங்களில் அக்கிரமா மக்கள் உறுக்கமாக கோரிக்கை வைக்க, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர் முதலில் குறைவாக தொடங்கிய எண்ணிக்கை நாளைடைவில் பெரும் போராட்டமாக மாறியது.

அப்போதுதான் ஜூலி என்ற பெண்மணி மதுரையில் ஒரு குழுவை வைத்து கொண்டு ஊரை சுற்றும் மோடி மதுரை பக்கம் வாடி... உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பிரதமரை அவதூறாக கடும் சொற்களால் கூக்குரல் போட்டு கத்தி கொண்டு இருந்தால், அதனை பலரும் "வாட்ஸாப் ஸ்டேட்டஸ்"  வைக்க, முகநூலில் பகிர ஒரே நாளில் பேமஸ் ஆனால் அவளை சில ஊடகங்களும் பேட்டி எடுத்தன.

ஏன் ஜூலி மீது கைவைத்தால் என் தங்கைக்காக நாங்கள் களத்தில் இறங்குவோம் என லட்ச கணக்கான சமூக வலைத்தள வாசிகள் கொந்தளித்தனர், பல அரசியல் இயக்கங்கள் ஜூலிக்கு ஆதரவு தெரிவித்தனர் இப்படி மிக பெரிய ஜூலியின் பிம்பம் தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் உண்மை முகம் வெளியில் தெரிந்தது.



யாரெல்லாம் ஜூலியை உயர்த்தி பேசினார்களோ அவர்கள் எல்லாம் கடும் சொற்களால் ஜூலியை திட்டி தீர்த்தனர், உன்னை நல்லவள் என நம்பினோமே உனக்கா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீர தமிழச்சி என பட்டம் கொடுத்தோம் என பலர் புலம்பினர். ஜூலி மட்டும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்றால் இன்று ஏதேனும் தனக்கு "சாதகமான அரசியல் கட்சியில்" சேர்ந்து சேர்மன் அல்லது மேயராக கூட ஆகியிருப்பாள். இன்று வரை தமிழக மக்களும் வீர தமிழச்சி என பட்டம் கொடுத்து கொண்டு வாழ்நாளை கழித்து கொண்டு இருப்பார்கள்.

ஊர் ஊராக சுற்றும் மோடி என கிண்டல் செய்ததற்கு உக்ரைன் போர் முடிவு சொல்லிவிட்டது.  மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்ட காரணத்தால் தான் பல உலக நாடுகள் இப்போது இந்தியாவை நட்பு பட்டியலில் வைத்துள்ளன அதன் மூலமாகத்தான் இந்திய மாணவர்களை உக்ரனில் இருந்து மீட்க முடிந்தது. இது இன்று பலருக்கும் தெரிந்து இருக்கும்.

ஆனால் ஊர் ஊராக சுற்றும் மோடி "மதுரை பக்கம் வாடி " என கோஷம் எழுப்பிய ஜூலி மதுரை பக்கம் தலைவைத்து கூட படுப்பது இல்லை ஊர் ஊராக சுற்றி வருகிறாள். இப்போது கூட தமிழக மக்கள் "போலி போராளிகளை"  நம்பினால் நாளை அனைத்தும் உங்கள் தலையில் விழும் என்பதற்கு ஜூலியின் இந்த வீடியோவே சாட்சி. (உதயகுமார் செந்திவேல் நிர்வாக ஆசிரியர் - TNNEWS24).