இந்தியா : மாதவழிபாட்டு தலங்களுக்கு தங்களது செல்லப்பிராணிகளை எந்த ஒரு பக்தரும் உடன் அழைத்து செல்வதில்லை. இது தனிசட்டமாக இயற்றப்படாவிட்டாலும் எந்த ஒரு மதத்தை சேர்ந்தவரும் இந்த துர்ச்செயலை செய்ய முன்வருவதில்லை. ஆனால் யுடியூப் போன்ற தளங்களில் தங்களுக்கென ஒரு ப்ளாக்கை வைத்திருக்கும் சிலர் செய்யும் காரியம் பக்தர்களை காயப்படுத்தவே செய்கிறது.
இந்நிலையில் நொய்டாவில் வசிக்கும் வலாக்கரான விகாஸ் யாதவ் என்பவர் தனது செல்லப்பிராணியான நாயை கேதார்நாத் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் அந்த பிராணியை சந்நிதியில் இருந்த நந்தி சிலையை தொட்டு வணங்கவைத்து பூசாரியிடம் விபூதி பூச சொல்லியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராமில் " ஏய் நான்தான் நவாப் (அந்த நாயின் பெயர்). இப்போது எனக்கு 4.5 வயதாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பயணப்பட்டதை போல 70 வயதுடையவர் கூட பயணித்திருக்க முடியாது என்பதை மிக பெருமையாக சொல்வேன். எனது பெற்றோர்கள் என்னை எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்கின்றனர்.
எல்லா பெற்றோர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளுக்கு மரியாதை கொடுத்தால் உங்களுக்கு முன்னால் இருப்பவரும் மதிப்பார். என் பெற்றோர்கள் என்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துச்செல்வதால் எந்தவொரு பிரச்சினையையும் சந்திப்பதில்லை. எனது பெற்றோர்கள் அந்த பிரச்சினையுடன் போரிடுகிறார்கள்.
அதேபோல நீங்களும் முயற்சி செய்யுங்கள்" என தனது செல்லப்பிராணியான நவாப் பேசியது போல வீடியோ வெளியிட்டுள்ளார் விகாஸ்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து பத்ரிநாத்-கேதார்நாத் கமிட்டி விகாஸ் மீது மதஉணர்வுகளை புண்படுத்தியதாக காவல்துறையில் புகாரளித்துள்ளது. புகாரின் அடைப்படையில் விகாஸ் மீது FIR பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இதுகுறித்து பேசிய விகாஸ் " நான்கு வருடங்களுக்கு மேலாக நவாப்பை கோவில்களுக்கு அழைத்துச்சென்று வருகிறேன். இப்போது என்ன நடந்துவிட்டது. இந்த எதிர்ப்பு எனக்கு புதிதாக இருக்கிறது. எதற்க்காக இந்த நாடகம்" என கேள்வியெழுப்பிவருகிறார்.