சினிமா துறையில் ஒரு நடிகை, நடிகர் மிகப்பெரிய பிரபலமாக இருக்கிறார் என்றால் அவரது வரிசையில் அவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் சினிமாவிற்குள் நுழைவார்கள் ஏன் அந்த நடிகரின் வாரிசுகள் கூட தொடர்ச்சியாக சினிமாவில் நடிப்பார்கள் ஏனென்றால் தன் தாய், தந்தையின் மூலம் கிடைத்த ஒரு ஃபேம் சினிமாவில் எளிதாக அவர்களை அறிமுகப்படுத்திவிடும் அப்படி அறிமுகமாகும் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் அனைவராலும் இந்த சினிமாவில் ஜொலிக்க முடிவதில்லை! உதாரணமாக தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த ராதாவைப் போன்று அவரது இரண்டு மகள்களும் சினிமாவில் நடித்தனர் அவர்களின் முதல் படங்கள் கொடுத்த வரவேற்பை அடுத்தடுத்த படங்கள் கொடுக்கவில்லை அதனால் அவர்களும் சினிமாவை விட்டு விலகினார்கள். இவரது வரிசையிலேயே சத்யராஜையும் ஒரு எடுத்துக்காட்டிருக்கு கூறலாம். ஏனென்றால் சத்யராஜ் இன்றளவும் தமிழ் சினிமாவில் ஒரு மறுக்க முடியாத நாயகனாக திகழ்ந்து வருகிறார். ஆனால் அவரது மகன் சிபி சத்யராஜ் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை கண்டாலும் தற்போது அவருடைய படங்கள் அனைத்துமே பெருமளவில் பிரபலமடையவில்லை.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுமே சினிமா துறையில் தான் இருக்கிறார்கள் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் குறிப்பிடத்தக்க வரவேற்பை கண்டு வருகிறார் இவர் இயக்கத்தில் வெளியான 3 , மயக்கமென்ன மற்றும் லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை கண்டது. அதேபோன்று ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வரைகலை வடிவமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் பிறகு ஒரு புரொடக்ஷன் நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் தயாரிப்பாளராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி தனது தந்தையை வைத்து கோச்சடையான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்த படத்தின் மூலம் தோல்வியை தழுவினார்.
ஆனால் வரைகலை வடிவமைப்பாளராக படையப்பா, பாபா, சண்டக்கோழி, சந்திரமுகி, சென்னை 600028,. சிவாஜி போன்ற வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் தனது தந்தையை வைத்து 3d தொழில்நுட்பத்தில் கோச்சடையான் திரைப்படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் பெரும் நஷ்டத்தை சந்தித்ததோடு அந்த நஷ்டம் குறித்த பஞ்சாயத்து கூட இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் நாவலை ஒரு வெப் சீரியஸ் ஆக இயக்க உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹூட் என்று குரல் சமூக ஊடகத்தை துவங்கினார். இந்த செயலியானது தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியின் மூலம் படிக்காதவர்கள் கூட மிக எளிமையாக குரல் வழியாக தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
மேலும் தங்கள் குரல் மூலமாகவே பிரபல நடிகை, நடிகர்களிடம் நாம் கேட்க நினைக்கும் கருத்துக்களையும் கேட்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த செயலி ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களுக்கு பெரும் சவாலையும் போட்டியையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த செயலியானது எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறாததால் தற்போது இந்த நிறுவனத்தை இழுத்து மூட சௌந்தர்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனா இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை, இருப்பினும் இந்த செயலியை தற்போது உபயோகித்து வருபவர்களால் லாகின் கூட செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தை மூடாமல் இருப்பதற்கு சூப்பர் ஸ்டார் முயற்சித்தும் ஏதும் நடக்கவில்லை எனவும் கூறப்படுகிறது....