24 special

மண்ணுக்குள் புதைந்து கிடந்த மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்!! பல நூறு வருடம் கழித்து நடந்த அந்த அதிசயம்...

shivan
shivan

பழந்தமிழர்கள் அதிக அளவில் கோவில்கள் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் எங்கு திரும்பினாலும் ஏதேனும் ஒரு கோவில் இருப்பதை பார்க்க முடியும். உலகின் பல்வேறு இடங்களில் பல வித்தியாசங்களும் அதிசயங்களும் நிறைந்த கோவில்கள் அமைந்துள்ளது. அவற்றுள் சில கோவில்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் சென்று தினந்தோறும் வழிபட்டு வருவதை பார்க்க முடிகிறது. மேலும் இந்தியாவை பொருத்தவரை மட்டுமல்ல உலகின் பல்வேறு இடங்களிலும் சிவன் கோவில் அதிக அளவில் இருந்து வருகிறது. சிவன் கோவில்கள் இல்லாத ஊர்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு எங்கு திரும்பினாலும் தெருவிற்கு நான்கு கோவில்கள் ஆவது சிவன் கோவிலாக இருந்து விடும். 


அவற்றில் சில கோவில்கள் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக கருதப்பட்டு பல நேர்த்திக்கடன்களும், வேண்டுதல்களும் செய்வதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணமே இருந்து வருகின்றனர். இன்று மிகவும் பிரசித்தி பெற்ற புகழ் வாய்ந்த கோவில்கள் அனைத்துமே வரலாற்று பின்னணி கொண்டவையாக இருந்து வருகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலங்களில் இருந்தே வழிபட்டு வரும் கோவில்கள் இன்று அளவிலும் மிகவும் கம்பீரமாக பல வரலாற்று சான்றுகள் உடைய பழமை வாய்ந்த கோவில்களாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு பழமை வாய்ந்த கோவில்கள் நம் ஊர்களை சுற்றி இருந்து வந்தாலும் கூட புதிது புதிதாகவும் சிவன் கோவில்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. மேலும் எதிர்காலத்தில் இன்னும் நிறைய கோவில்கள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அதற்கு ஏற்றது போலவே தொடர்ந்து கடந்த சில வருடங்களாகவே சிவன் சிலைகள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும் காரணங்களுக்காக மனங்களை தோண்டும் பொழுது மிகவும் பழமை வாய்ந்த சிவன் சிலைகள் மனிதர்களின் கண்களில் தென்பட்டு அதனை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆராய்ச்சி செய்யும் பொழுது அவ்வாறு கண்டெடுக்கப்படும் சிலைகள் அனைத்துமே மிகவும் பழமை காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் மண்ணுக்கு அடியில் புதைந்து பல வருடங்கள் ஆனது என்றும் தெரிய வருகிறது. இவ்வாறு தொடர்ந்து சிவன் சிலைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு சிவன் கோவிலே மண்ணுக்குள் புதைந்து இந்த நிலையில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அது குறித்து விரைவாக காணலாம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகில் உள்ள ஆயிலவாடி கிராமம் பகுதியில் மண்ணுக்குள் ஒரு சிவன் கோவிலில் புதைந்து கிடந்துள்ளது. அதனை தற்பொழுது கண்டுபிடித்து மண்களை அகற்றி கோவிலை சுத்தம் செய்து அங்கு அமைந்துள்ள சிவனை வணங்கி அனைவரும் பூஜை செய்து வழிபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த வீடியோவில் இந்த கோவில் கடந்த 1000 வருடங்களுக்கும் பழமை வாய்ந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த கோவில் கட்டி முடித்த பிறகு இங்கு ஏரி அமைக்கப்பட்டதாகவும், அவ்வாறு ஏரிக்கரை உருவாக்கப்பட்ட பொழுது இந்தக் கோவிலின் பாதி பகுதி மண்ணால் மூடப்பட்டது என்றும், கோவிலின் நுழைவாயில் மட்டும் மூடாமல் இருந்ததாகவும் கூறியுள்ளனர். 

மேலும் கடந்த 15 வருடங்களாக இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக பலரும் வந்து சென்ற நிலையில் தற்போது தான் இந்த கோவிலை சரி செய்யும் வேலை தொடங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக கூடி முயற்சி செய்து இந்த பணியை தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். இத்தகைய பழமை வாய்ந்த கோவில் அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கோவில் குறித்து அப்பகுதியில் விசாரித்தபொழுது மண்ணுக்குள் புதைந்தாலும் இந்த சிவனின் சக்தி குறையவில்லை அதனாலதான் 1000 ஆண்டுகாலம் கழித்து இந்த கோவில் மேலே வந்துள்ளது என கூறுகின்றனர்.