24 special

மோசடியில் அம்னெஸ்டி இந்தியா..! அமுக்கிய அமலாக்கத்துறை..!

Aakar patel
Aakar patel

புதுதில்லி : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்னெஸ்டி இன்டர்நெஷனல் தலைவரான ஆகார் பட்டேலுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியிருந்தது. இத கண்டு கொதித்த நீதிமன்றம் சிபிஐ ஆகார் படேலிடம் சிபிஐ அமைப்பு மன்னிப்பு கேட்டீ ஆகவேண்டும் என ஏகத்துக்கும் அம்னெஸ்டிக்கு ஆதரவாக பேசியிருந்தது. ஆனால் அம்னெஸ்டி மற்றும் அதன் தலைவர் ஆகார் பல மோசடிகளில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


அந்நியச்செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக அம்னெஸ்டி இன்டர்நெஷனல் அமைப்புக்கு 51 கோடி ரூபாயும் அதன் முன்னாள் தலைவரான ஆகார் படேலுக்கு 10கோடி ரூபாயும் அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. அம்னெஸ்டி நேரடியாக பணத்தை நன்கொடை பெற்றால் FCRA சட்டப்படி வரி செலுத்தவேண்டும்.

அதை சட்டத்திற்கு புறம்பாக பெரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள அதன் நிறுவனங்களின் மீது வெளிநாட்டில் இருந்து நேரடி முதலீடு செய்யவைத்து அதன்பிறகு அந்த நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளது. இது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளின் அடுத்தடுத்த விசாரணையில் வெளிவந்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நெஷனல் யுகே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை தவிர்க்கவும் இந்திய நாட்டில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் அந்நிய நேரடி  கொள்கையை பயன்படுத்தி FCRA அல்லாத நிறுவனங்கள் மூலம் பெரிய பெரிய வெளிநாட்டு பங்களிப்புகளை அனுப்பிவந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை ஆகார் படேலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. அதையடுத்து அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. இதற்காக சிபிஐ மன்னிப்பு கேட்கவேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது. தற்போது மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால் நீதிமன்றம் யாரிடம் யார் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுமா  என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.