24 special

பாஜகவை வீழ்த்த... அதிமுக புது வியூகம் .. யார் வந்தாலும் பதவி உண்டு

edapadi, annamalai
edapadi, annamalai

பாஜகவை வீழ்த்திட அதிமுக  தலைமை புதிய வியூகம் வகுத்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.தமிழகத்தில் பாஜக -அதிமுக கூட்டணி முறிவடைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி  குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை  செய்தியாளர் சந்திப்பில்  பாஜகவின் தேசிய தலைமை அதற்கான பதிலை தெரிவிக்கும் எனக் கூறினார்.அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை வீழ்த்திட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களை அதிமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் அக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழக முழுவதும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்" பாதயாத்திரையை தொடங்கி மக்களை நேரடியாக சந்தித்து  விளிம்பு நிலை மக்களின் குறைகளை கேட்டு  தெரிந்து கொள்கிறார். இதனால் அண்ணாமலையின் பாதயாத்திரை காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


இதற்குச் சான்றாக கோவை தெற்கில் அண்ணாமலையை காண பெரியவர் முதல் சிறியவர்கள் வரை பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.இதனைக் கண்டு எதிர்க்கட்சிகள் கூட்டணி கட்சிகளும்  திக்கு-முக்காடினர். அண்ணாமலையின் பாதயாத்திரை தமிழகத்தில் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக பெருமளவு கருத்துக்களும் நிலவியது.குறிப்பாக அதிமுக தலைமையில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.பாஜக அதிமுக கூட்டணி முடிவடைந்தது தொடர்ந்து  அன்றே அதிமுகவில் இணைய பாஜக பிரமுகர்கள் ஈர்க்கப்பட்டனர். இதில் பாஜகவின் துணை தலைவர் நைனார் நாகேந்திரனின் அண்ணன் வீர பெருமாள் அதிமுகவில் இணைந்தார் பின் தென்காசியின் முன்னாள் எம்எல்ஏ வசந்தி முருகேசன் சேர்ந்தார்.தற்போது  பாஜக கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு  அதிமுகவில் பதவி  வழங்கி வருகிறது.இதில் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு ஈர்க்கப்பட்ட  திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சரவணன் மருத்துவ அணி செயலாளர், நிர்மல் குமார் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், மற்றும்  முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என நியமிக்கப்பட்டு அதிமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.யார் வந்தாலும் பதவி உண்டு என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வீழ்த்திட அதிமுக தலைமை புது வியூகத்தை கையாண்டு வருவதாக பாஜக பிரமுகர்கள் காட்டமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.