Cinema

எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர்!....நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி.!

actor bobby simha
actor bobby simha

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, இவர் கொடைக்கானலில் தான் சினிமா வாழ்க்கையில் சம்பாரித்த பணத்தை வைத்து தன் குடும்பத்திற்காக சொந்தமாக பங்களா ஒன்றை கட்டுவதற்காக தனது நண்பர் காதரின் பரிந்துரையில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜமீர் என்பவருடன் வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒப்பந்த அடிப்படையில் ரூ.1.70 கோடி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜமீர் யுகேவில் படித்து வந்ததாக தெரிகிறது. தற்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாபி சிம்ஹா, கொடுத்த பணத்திற்கு கணக்கை காட்டாமல் மேலும் 50 லட்சம் கொடுத்தால் தான் தன்னால் அடுத்த வேலையை பாக்க முடியும் என்று அதிகாரமாக பணத்தை ஜமீர் கேட்டதற்கு, வீட்டு வேலைகள் முடித்தவுடன் தருவதாக தெரிவித்தார். 90% வேலைகள் முடிந்ததாக ஒப்பந்ததாரர் கூறும் நிலையில், பாதி வேலை முடிக்கவே இல்லை என புலம்பி தள்ளுகிறார் பாபி சிம்ஹா.


முன்னதாக கட்டுமான செலவுக்கான ரசீதை கேட்டுள்ளார் பாபி சிம்ஹா அதனை கொடுக்க மறுத்து உள்ளூர் மக்களை திரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று கூறியுள்ளார். இருவருக்கும் இடையே முரண்பாடு காரணமாக ஒப்பந்ததாரர் ஜமீர் பணிகளை பாதிலேயே விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனை அறிந்த நடிகர் பாபி சிம்ஹா, ஜமீர் அவரது தந்தை மற்றும் உறவினர் மீது கொடைக்கானல் நீதி மன்றத்தில் புகார் மனு அளித்தார். இதன் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாபிசிம்ஹா கொடைக்கானலில் தனது வீட்டிற்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து 90% முடிந்த வீட்டினை காண்பித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாபிசிம்ஹா தனது பெற்றோருக்காக சொந்த ஊரில் வீடு கட்ட நினைத்ததாகவும், அதை சில அரசியல்வாதிகள் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

வீட்டினை வேறு ஒரு இஞ்சினியரை கொண்டு காண்பித்ததற்கு பேஸ்மெண்ட் தரமாக இல்லை, அட்டைப்பெட்டி வைத்து கட்டியது போல் இருப்பதாகவும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என அவர் கூறியதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் நடிகர் பாபிசிம்ஹா, "ஒரு நடிகரான எனக்கே இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது என்றால் சாதாரண மக்கள் நீங்கள் எல்லாம் இங்கு இடத்தை வாங்கி வீடு கட்டுவதற்குள் எப்படி பிரச்னையை சமாளிக்க போகிறீர்கள் என தெரியவில்லை" என கூறினார். போலியாக பட்டா வைத்து நான் வீடு காட்டுவதாக தன் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், என்னிடம் முறையான ஆவணம் இருப்பதாகவும் பாபிசிம்ஹா கூறியுள்ளார். தன்னை ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பாபிசிம்ஹா குற்றச்சாட்டை தொடர்ந்து ஒப்பந்ததாரர் ஜமீர்ரிடம் விளக்கம் கேட்டபொழுது பாபிசிம்ஹா கூறியது போல் தான், நான் வீடு கட்டியதாகவும் இது பற்றி சட்டரீதியாக சந்திக்கவும் நான் ரெடி என அவர் விளக்கமளித்தார். தற்போது இந்த விவகாரம் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.