தமிழகத்தில் குறிப்பாக கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது பாஜக தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது ஏன் இன்னும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தற்கொலை தாக்குதல் என அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இந்த சூழலில் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது காவல் ஆணையர் பேசியதில் இருந்து கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்பது உறுதியானது, இந்த சூழலில்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்து வாங்கி கட்டி கொண்டுள்ளார்.
ஜோதிமணி அவரது முகநூல் பக்கத்தில்,கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம்.மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன.லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,மதவெறி பிடித்த, கலவர பாஜக,பொறுப்பற்ற முறையில்,கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக மலிவான அரசியல் செய்வது அவமானகரமானது.
மோடி ,பாஜக ஆட்சியைப் போல சீனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிற, தீவிரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கிற ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும். என குறிப்பிட்டார்.
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட சம்பவம் என்றும் இறந்தவர் வீட்டில் கைப்பற்ற வெடி பொருள்களில் இருந்து அனைத்தும் தெளிவாக தெரிந்த பின்பும் ஜோதிமணி மத வெறுப்பு அரசியல் என பேசுவது அவருக்கே மனசாட்சி உறுத்தவில்லையா என பலரும் அவரது முகநூல் பக்கத்திலேயே சென்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தேவையில்லாமல் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கருத்து தெரிவிக்க சென்று வாண்டடாக வண்டியில் ஏறி நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறார் ஜோதிமணி.