நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக சில நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி, இந்துத்துவ அமைப்புகள், வலதுசாரி சிந்தனைகளுக்கு ஆதரவாகவும், ஆளும் திமுக அரசு, திராவிட அமைப்பினர், இடதுசாரிகளுக்கு எதிராக பதிலடிகளையும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "திராவிடிய சித்தாந்தத்தின் பொய்க்களை சுட்டிக்காட்டும் உங்களை திராவிடியான்ஸ் தொடர்ச்சியாக விபச்சாரி, வேசி, தேவடியாள் என்றெல்லாம் தாக்குகிறார்கள். எப்படி அமைதியாக இருக்கிறீர்கள் ?" என்று பலர் கோபமாக ஆதங்கமாக கேட்கிறார்கள்.
திராவிடியர்கள் தங்கள் தாய், சகோதரி, தலைவி போலவே என்னையும் கருதுகிறார்கள் என்பது புரிந்துவிட்டதால், அந்த அறியாமையை அன்போடு பொறுமையாக எதிர்கொள்கிறேன். பாவம் திராவிடிய பற்றாளர்களின் அறியாமையை போக்குவது நம் சமூக கடமை அல்லவா?’’எனப்பதிவிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரியின் இந்த ட்வீட்டால் கடும் கோபமடைந்த திமுக- திகவை சேர்ந்தவர்கள் நிதானமிழந்து கெட்ட வார்த்தைகளைக் கொண்ட கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.கஸ்தூரியின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள பக்குவமித்தாத அவர்கள் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தி வக்கிரமாக நடந்து கொள்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
த’திராவிடியர்கள் தங்கள் தாய், சகோதரி, தலைவி போலவே என்னையும் கருதுகிறார்கள் என்பது புரிந்து விட்டால் அந்த அறியாமையை அன்போடு ஒறுமையாக எதிர்க்கொள்கிறேன்’’ என்கிற நடிகை கஸ்தூரியின் வரிகளை, கருத்துக்களை புரிந்து கொள்ளாமல், அவரை தனிப்பட்ட முறையில் கொச்சையாக பதிவிடும்.
திராவிடவாதிகள், பகுத்தறிவு இல்லாதவர்கள், தங்கள் தாய், சகோதரி கருதுபவர்களையும் கொச்சைப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என கஸ்தூரிக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.