கர்நாடகா : ராஜ்யசபா சீட்டுக்களுக்கான தேர்தல் இந்தியாவெங்கும் நடைபெற்றுவருகிறது. ஹரியானா உள்ளிட்ட சில இடங்களில் காங்கிரசார் குறுக்கு வாக்களித்ததாகவும் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கர்நாடகாவின் நான்கு ராஜ்யசபா சீட்டுக்களுக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. அதேபோல மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் இருவர் குறுக்கு வாக்கு அளித்திருந்தனர். இதனால் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த தேர்தலில் நான்கில் மூன்றை பிஜேபி கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் ஒரு இடத்தை வென்றுள்ளது. பிஜேபியின் முக்கிய வேட்பாளர்களாக கருத்தப்படும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் காங்கிரசின் தற்போதைய ராஜ்யசபா எம்பியான ஜெய்ராம் ரமேஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஜேபியின் மூன்றாவது வேட்பாளரான லஹர் சிங் சிரோயா வெற்றிபெற்றுளார்.
நான்காவது இடத்திற்கு நடந்த கடும் போட்டியில் பிஜேபி பொருளாளர் நான்காவது இடத்திற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட காங்கிரசின் மன்சூர் அலி மற்றும் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் குபேந்திர ரெட்டி ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
ஒரு வேட்பாளரின் வெற்றிக்கு குறைந்தபட்ச வாக்குகள் 45 தேவை. 70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் தனது தரப்பில் இரண்டு வேட்பாளர்களை களமிறக்கியது. தற்போதைய எம்பி ஜெய்ராம் 46 வாக்குகளையும் மன்சூர் அலி 25 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதனால் பிஜேபி மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளது.